Published:Updated:

முதல்வரின் பேரன் அவரைவிட பணக்காரன்

Vikatan Correspondent
முதல்வரின் பேரன் அவரைவிட பணக்காரன்
முதல்வரின் பேரன் அவரைவிட பணக்காரன்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளருமான, நரா லோகேஷ் அவரின் குடும்ப சொத்து மதிப்பை தெரிவித்தார். அவர் கூறியதுபடி, அந்திர முதல்வரின் மொத்த குடும்ப சொத்து மதிப்பு 74 கோடி ரூபாய். சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 3.73 கோடி ரூபாய். 

முதல்வரின் பேரன் அவரைவிட பணக்காரன்


நாயுடு குடும்பத்துக்கு சொந்தமான ஹெரிடேஜ் குரூப் நாயுடுவின் மனைவி புவனேஷ்வரியின் பெயரில் உள்ளது. அவருக்கு மட்டும் மிக அதிகமாக, 33.66 கோடி ரூபாய் சொத்து உள்ளது. நாயுடுவின் பேரனும், லோகேஷின் மகனுமான 18 மாத குழந்தை தேவான்ஷ்க்கு 14 கோடி அளவுக்கு சொத்து உள்ளது. இதன்படி பார்த்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைவிட அவரது 18 மாத பேரனுக்கு சொத்து அதிகமாக உள்ளது.