Published:Updated:

500 பேரின் பாஸ்போர்ட்டுகள் முடக்கம்!

Vikatan Correspondent
500 பேரின் பாஸ்போர்ட்டுகள் முடக்கம்!
500 பேரின் பாஸ்போர்ட்டுகள் முடக்கம்!
500 பேரின் பாஸ்போர்ட்டுகள் முடக்கம்!

மதுரை, நெல்லை மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களில் 500 இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மனீஸ்வர ராஜா தெரிவித்தார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், போலி ஆவணங்கள் தந்ததால் 500 பேரின் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளது என்றார். 

மேலும், 500 பேர்  மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யக்கோரி காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார்.