Published:Updated:

ஐ.எஸ்.இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் முக்கியப்புள்ளி கேரளாவைச் சேர்ந்தவர்-அதிர்ச்சி தரும் என்.ஐ.ஏ.

உலகையே அச்சுறுத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளின் பார்வையில் இந்தியாவும் தப்பவில்லை. அண்மையில் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று கேரளாவைச் சேர்ந்த ஆறு பேரை தேசிய புலனாய்வுத் துறை கைது செய்தனர். இந்நிலையில் ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் முக்கிய பணியில் கேரளாவைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோழிகோட்டைச் சேர்ந்த இவரது முழு பெயர் சஜீர் மங்கலச்சாரி அப்துல்லா. இவரின் தந்தை ஒரு ட்ரக் டிரைவர். அப்துல்லா கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவை விட்டுச் சென்றுள்ளார். நடுத்தர குடும்பதைச் சேர்ந்த அப்துல்லா கடின உழைப்பாளி, அரசியலில் ஆர்வம் இல்லாதவர் என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர். அப்துல்லாதான் ஐ.எஸ் இயக்கத்தில் அதிகளவு இந்திய நாட்டவர்களை சேர்த்ததில் முக்கிய நபர் என்று தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக இவர் தேர்ந்தெடுத்தது பெரும்பாலும் பட்டதாரி இளைஞர்களாம். இவர்கள் கொடைக்கானலுக்கு வரும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கேரள பா.ஜ.க.வில் இஸ்லாத்துக்கு எதிராக செயல்படுபவர்களின் பட்டியலை தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், சிரியாவில் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்த 67 ஐ.எஸ் இயக்கத்தினர் உள்ளதாக தேசிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.  
 
பின் செல்ல