Published:Updated:

ஓலா, உபர் இனி நேரடியாக கூகுளில் முன்பதிவு

Vikatan Correspondent
ஓலா, உபர்  இனி நேரடியாக கூகுளில் முன்பதிவு
ஓலா, உபர் இனி நேரடியாக கூகுளில் முன்பதிவு
ஓலா, உபர்  இனி நேரடியாக கூகுளில் முன்பதிவு

ஓலா மற்றும் உபர் கால்டாக்சி சேவைகளைப் பெற, இனி நேரடியாக கூகுள் தேடலில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூகுள் அறிவித்துள்ளது. 

ஓலா, உபர் கால்டாக்சியில் பயணிக்க  நினைக்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள், ஆப் (App) மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தற்போது கூகுள் மேப்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ள வெர்ஷனில் நேரடியாக கால்டாக்சி சேவையை பதிவு செய்து கொள்ள முடியும்.

கூகுளின் இந்த புதிய வசதியால், பயணிகள் ஓலா மற்றும் உபர் ஆகிய இரண்டுக்குமான பயண சேவை வகைகள் மற்றும் கட்டண விவரங்களையும் தெரிந்துக் கொள்ள முடியும். இதன்மூலம் கட்டண சேவைகளை ஒப்பிட்டு, நமக்கு உகந்த சேவையை தேர்வு செய்து கொள்ள முடியும்.