Published:Updated:

63,000 மெகாவாட் அணுசக்தி திறன் : இந்தியாவின் டார்கெட்

Vikatan Correspondent
 63,000 மெகாவாட் அணுசக்தி திறன் : இந்தியாவின் டார்கெட்
63,000 மெகாவாட் அணுசக்தி திறன் : இந்தியாவின் டார்கெட்
 63,000 மெகாவாட் அணுசக்தி திறன் : இந்தியாவின் டார்கெட்

இந்தியாவில்  2032-ம் ஆண்டிற்குள்,  63,000 மெகாவாட் அணுசக்தி திறன் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அணுசக்தி கமிஷனின் இந்திய  உறுப்பினர் ரவி குரோவர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இன்று நடந்த இந்திய அணு சக்தி உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரவி குரோவர் செய்தியாளர் சந்திப்பில், “இந்தியா முன்னர் திட்டமிட்டப்படி 2032-ம் ஆண்டிற்குள், 63,000 மெகாவாட் அணுசக்தித் திறனை உற்பத்தி செய்யும். அணு வினியோகக் குழுவில் (Nuclear Suppliers Group) உறுப்பினராக, சீனா உள்ளிட்ட அனைத்து  என்.எஸ்.ஜி உறுப்பினர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.

அணு வினியோகக் குழுவில் இணைய சீனாவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாள் இந்தியாவின் நிலைப்பாடு எப்படியிருக்கும் என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரவி குரோவர், “ சீனா உடனான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும், அப்படி இல்லையெனில் இந்தியாவின் அனுசக்தி உற்பத்தி திட்டங்கள் விரிவடையப்படும்” என கூறியுள்ளார். 


அணு வினியோகக் குழுவில் உறுப்பினராக, அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில்  (Non-Proliferation Treaty) கைழுத்திட்டிருக்க வேண்டும் என சீனா இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.