ஃபேஸ்புக்கின் இடையூறு! டிஸ்ரப்ஷன் தியரியை கையில் எடுக்கிறதா ஃபேஸ்புக்?

ஒரு ஊரில் மளிகைக்கடை, பால் நிலையம், காய்கறி மார்க்கெட் என தனித்தனியாக இயங்கி வரும் நிலையில் சூப்பர் மார்க்கெட் என்ற ஒரு விஷயம் அறிமுகமாகி இந்த மூன்று விஷயங்களையும் முறியடிப்பது தான் டிஸ்ரப்ஷன் இனோவேஷன். இதே விஷயத்தைத் தான் ஃபேஸ்புக்கும் செய்ய நினைக்கிறது.  ஆரம்ப காலத்தில் தன்னை வெறும் சமூக வலைதளம் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடி, பேசி, பழக உதவும் இணையதளமாக மட்டுமே இருந்து வந்த ஃபேஸ்புக். கொஞ்சம் கொஞ்சமாக தனது வசதிகளை மேம்படுத்தி வந்தது. ஆனால் தற்போது ஃபேஸ்புக் எடுக்கும் முயற்சிகள் தொழில்நுட்ப உலகின் போட்டியை சமாளிக்கும் விதமாக அனைத்து வசதிகளையும் ஒற்றை ஆப் மூலம் தரும் முயற்சியில் இறங்கியுள்ளது ஃபேஸ்புக். 

சமூக வலைதளம், வொர்க் ப்ளேஸ், விளம்பரதாரர்களுக்கான இடம், புகைப்படங்கள், வீடியோ, இணையதள பதிவுகள், லைவ் வீடியோ, இமோஜி என உலகையே ஒற்றை ஆப்ஸுக்குள் சுருக்கி விட நினைக்கிறது ஃபேஸ்புக்.  கனெக்ட் என்ற வார்த்தையை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஃபேஸ்புக்கின் இலக்காக மார்க் சொல்ல நினைப்பது உலக மக்களை ஒற்றை ஆப்ஸ் அல்லது இணையதளத்துக்குள் இணைப்பது தான். 

இந்த விஷயத்தை நிலைநிறுத்த தான்  மார்க் தனது ஆரம்ப கால தடுமாற்றங்களில் முயற்சி செய்தார். இதனை சரியான நேரத்தில் இவருக்கு வழிகாட்டியவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். மக்கள் ஒருவரோடு ஒருவர் எப்படி தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை இந்தியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வைக்கும் விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

கனெக்ட் என்ற ஒற்றை வார்த்தை தான் இந்த டிஸ்ரப்ஷன் இனோவேஷனுக்கு வழிவகுத்துள்ளது. ஒரு சமூகத்துக்கு தேவைப்படும் விஷயத்தை தேவைப்படும் நேரத்தில் வழங்கும் டிஸ்ரப்ஷன் கோட்பாட்டை மையமாகக் கொண்டு செயல்படுகிறது ஃபேஸ்புக் என்பது தான் டெக் உலகின் முக்கிய பேச்சு.

வெறும் லைக் செய்து கொண்டிருந்த உலகை தனது உணர்வுகளை பிரதிபலிக்க வைத்தது. 2015-ல் இயர் ஆஃப் புக்ஸ், 2016ல் இயர் ஆஃப் ரன்னிங் என உலகின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை கொண்டுவந்தது. கிட்டத்தட்ட டைரி எழுதும் பழக்கத்தை மாற்றி தினசரி ஸ்டேட்டஸ் போட வைத்தது என மனிதரின் வாழ்க்கையில் பாகமாகிட்டது ஃபேஸ்புக். 

காலையில் நாம் இருக்கும் பகுதியின் வானிலையை சொல்கிறது. வெள்ளம், மழை, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டால் ''சேஃப்டி செக்'' செய்து நம் பாதுகாப்பை உறுதிபடுத்துகிறது. இத்தனை விஷயங்களையும் ஃபேஸ்புக் எனும் ஒற்றை வார்த்தைக்குள் வைத்து அனைவரையும் அங்கேயே இருக்க வைக்கும் வித்தை தான் ஃபேஸ்புக்கின் சக்ஸஸ் ஃபார்முலா.

இதனால் தனித்தனியாக மற்ற சேவைகள் பாதிக்கப்படுவது உண்மை தான் என்றாலும். மற்ற சேவைகளும் தனது வியாபாரத்தை ஃபேஸ்புக்கை வைத்து நிர்ணயிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படி ஆப் டாக்ஸிகள் வந்ததும் டாக்ஸி தொழில் அழியும் என்று கூறும்போது டாக்ஸிகள் ஆப்ஸ் டாக்ஸிகளாக மாறியதோ...அப்படி தான் ஃபேஸ்புக்கால் பாதிக்கப்படும் சேவைகள் ஃபேஸ்புக் உதவியோடு இயங்கும் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளது ஃபேஸ்புக்.

ஸ்பேஸ் எக்ஸ், கிராமப்புறங்களில் இணையம் என பறந்து விரியும் ஃபேஸ்புக் ஒரு டிஸ்ரப்ஷன் இனோவேஷன் என்பதில் ஆச்சர்யமில்லை. இப்போதே எல்லா சேவைகளையும் தனக்குள் உள்ளடக்கிவிட்ட ஃபேஸ்புக். இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ??? மார்க்குக்கு மட்டுமே வெளிச்சம்.

ச.ஸ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!