பெட்ரூம் ஃபோட்டோகிராஃபி - இதுதான் இப்போ செம ஹாட்!

ல்யாணத்துக்கு முன்பும் கல்யாணமான உடனேயும் தம்பதியரின் கெமிஸ்ட்ரியை காட்ட எடுக்கப்படுகிற கேண்டிட் வெட்டிங் ஃபோட்டோகிராஃபிதான் டிரெண்ட்.

இப்போது அதெல்லாம் கொஞ்சம் போர் என நினைக்க ஆரம்பித்திருக்கிற மார்டன் தம்பதியரின் லேட்டஸ்ட் விருப்பம் Boudoir shoots. Boudoir என்றால் ஃப்ரென்ச்சில் பெட்ரூம் என அர்த்தமாம். பெயரைக் கேட்டதும் கற்பனையை கன்னாபின்னாவென அலைய விட வேண்டாம். இது வேற மாதிரி!

மேற்கத்திய நாடுகளின் பிரபலமான இந்த ஃபோட்டோகிராஃபி, மெல்ல இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடையே இது செம  ஹாட்!

திருமண மண்டபம், ஹனிமூன் ஸ்பாட் போன்ற வழக்கமான லொகேஷன்களில் இந்தப் படங்கள் எடுக்கப்படுவதில்லை. புதுமண தம்பதியர் மட்டுமே தனித்திருக்கும் அந்தரங்கமான இடம்... இன்னும் ஒரு படி முன்னேறி, அவர்களது படுக்கையறை. boudoir  ஃபோட்டோகிராஃபிக்கு ஏற்ற லொகேஷன் இதுதான். 

ஃபோட்டோ எடுக்கப்படும் ஏரியாவுக்குள் சம்பந்தப்பட்ட கணவன்&மனைவியையும், ஃபோட்டோகிராஃபரையும் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை.

இந்த  Boudoir ஃபோட்டோகிராஃபிக்கென்றே வித்யாசமான காஸ்ட்யூம், பிராப்பர்ட்டிஸ் போன்றவையும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்தப் புகைப்பட ஆல்பம் அந்த இருவர் மட்டுமே பார்த்து ரசிப்பதற்கான பிரைவேட் பொக்கிஷம்.

ஃபோட்டோ எடுப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட ஃபோட்டோகிராஃபர், அந்தப் படங்கள் எக்காரணம் கொண்டும் வேறு யார் பார்வைக்கும் போகாது என்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். திருமணத்துக்கு முன்போ, திருமணமான உடனேயோ தம்பதியருக்குள் காணப்படுகிற அந்த கெமிஸ்ட்ரியை பதிவு செய்வதே இந்த ஃபோட்டோகிராஃபியின் நோக்கம். பின்னாளில் அது காணாமல் போகும் போது இந்த ஆல்பத்தைப் பார்த்து ஆறுதல் அடையவும் இது ஒரு வாய்ப்பாம்.

திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்களும், புதுமண தம்பதியரும் மட்டுமின்றி, சற்றே வயதான தம்பதியர்கூட இந்த ஃபோட்டோகிராஃபியில் ஆர்வமாக இருப்பது ஆச்சர்யம். காணாமல் போன காதலையும் நெருக்கத்தையும் புதுப்பிக்கும் முயற்சியாக இதற்குத் தயாராகிறார்களாம்.

ஆர்.வைதேகி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!