Published:Updated:

தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசின் அளவு கடுமையாக உயர்வு

தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசின் அளவு கடுமையாக உயர்வு
News
தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசின் அளவு கடுமையாக உயர்வு

தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசின் அளவு கடுமையாக உயர்வு

தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசின் அளவு கடுமையாக உயர்வு

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றின் மாசு அளவு கடுமையாக உயர்ந்துள்ளதாக ”தேசிய காற்றுத் தரக் குறியீட்டு” வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக தீபாவளியை முன்னிட்டு  மக்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்ததால், டெல்லியில் பல பகுதிகள் புகை மூட்டமாக காணப்பட்டதாகவும், காற்றுமாசின் அளவு பலமடங்கு உயர்ந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதே போன்று சென்னையில் தீபாவளி அன்று பதிவாகியுள்ள ஒலி மாசின் அளவை ஆய்வு செய்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. வழக்கத்தைவிட இரவு 10-12 மணி வரை ஒலி மாசு அதிகமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக பெரம்பூரில் 114 டெசிபல் மற்றும் குறைந்தபட்சமாக திருவல்லிக்கேணியில்  81.8 டெசிபல் ஒலி மாசு பதிவாகியுள்ளது.