'' '63 சீட்டு வாங்கி 5 சீட்டுதான் ஜெயித்திருக்கிறோமே’ என்கிற குற்ற உணர்வு தமிழக காங்கிரஸாருக்கு இருக்குமா?''

''உங்களுக்காக ஒரு குட்டிக் கதை. பறவைகளை ஏலமிடும் இடத்துக்குச் சென்றான் ஒருவன். அழகான கிளி ஒன்றைப் பார்த்து ஏலம் கேட்கத் தொடங்கினான். அவன் எவ்வளவு ஏலம் கேட்டாலும், அதைவிட அதிகமாக யாரோ ஏலம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் ஒரு வழியாக ஆயிரக் கணக்கான ரூபாய்கள் அதிகம் கொடுத்து அந்தக் கிளியை ஏலம் எடுத்தான். கிளியை வாங்கியதும் ஏலம் விட்டவரிடம், 'இந்தக் கிளி பேசுமா?’ என்று கேட்டான். 'இவ்வளவு நேரம் உனக்குப் போட்டியாக ஏலத் தொகையை உயர்த்தி உயர்த்திக் கேட்டது யார் என்று நினைத்தாய்? அந்தக் கிளிதான்!’ என்றார் ஏலம் விட்டவர். அப்படித்தான் தமிழக காங்கிரஸும். வந்த வரைக்கும் லாபம், வராததைப்பற்றி வருத்தமும் இல்லை!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''சமச்சீர் கல்வி, சாதாரண கல்வி என்று கல்விப் பிரச்னையிலும் கபடி ஆட்டம் நடக்கிறதே?''

''மாற்றுக் கல்வி, விடுதலைக் கல்வி ஆகியவற்றை முதன்முதலில் முன்வைத்துப் பேசிய சிந்தனையாளர் பாவ்லோ ஃப்ரெய்ரோ. 'மிருகங்களிடம் இருந்து மனிதன் வேறுபடும் மிக முக்கியமான இடம் உரையாடல்’ என்ற பாவ்லோ, 'உலகத்துக்குப் பெயரிட மனிதன் விரும்புவதாலேயே உரையாடல் சாத்தியம் ஆகிறது. ஆனால், உரையாடலில் எப்போதும் ஒருவழிப் பாதை சாத்தியம் இல்லை’ என்றார். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உரை யாடல் நிகழாமல், வெறுமனே ஆசிரியர் நிரப்பு பவராகவும், மாணவர் நிரப்பப்படுபவராகவும் இருக்கும் வரை எந்தக் கல்வியிலும் அறிவு முன்னேற்றம் சாத்தியம் இல்லை!''

- எஸ்.சுதா, திருநெல்வேலி.

''அழகிரி ஆங்கிலம் கற்றிருப்பாரா?''

''தெரியவில்லை. ஆனால், மே 13-ல் நிறையப் பாடங்கள் கற்றிருப்பார் என்று நினைக்கிறேன்.''

- தாமு, தஞ்சாவூர்.

''சீதையிடம் அனுமன் ராமனின் மோதிரத்தைக் கொடுத்தது ராமாயணம். சாகுந்தலையின் மோதிரத்தை துஷ்யந்தன் தொலைத்தது சாகுந்தலம். அதுபோல் ஆபரணங்களைக் கொண்ட காப்பியங்கள் இப்போது உண்டா?''

''காப்பியங்கள் என்ன, நடப்பே இருக்கிறதே. ஜெயலலிதா கழற்றிய தோடை அணிகிறார்; கனிமொழி அணிந்த மூக்குத்தியைக் கழற்றுகிறார். ஆனால், இவை காப்பியங்களா என்பதைநீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!''

- ஆ.அமுதா, கம்பம்.

'' 'ஒரே வார்த்தை ஒஹோனு வாழ்க்கை’ - சாத்தியம்தானா?''

''சாத்தியம்தான். சமயங்களில் அது திஹார் சிறையில்கூடத் தள்ளிவிடலாம். அந்த வார்த்தையின் முதல் எழுத்து 'ஸ்’, கடைசி எழுத்து 'ம்’.''

- கே.பழனிசாமி, திருப்பூர்.