Published:Updated:

''எவ்வளவு அழகா பால் பொங்குது பாருங்க?''

இர.ப்ரீத்தி

'ரீல் லைஃப்’ பார்ட்டிகள் சிலரிடம் 'ரியல் லைஃப்’ சுவாரஸ்யங்கள் கேட்டோம்...

''எவ்வளவு அழகா பால் பொங்குது பாருங்க?''

சிவ கார்த்திகேயன்: ''ஒன்பது மாசத்துக்கு முன்னாடி என் மாமா மகளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சொந்தக்காரப் பொண்ணா இருந்தாலும், கல்யாணத்துக்கு முன்னாடி நான் பேசினதே கிடையாது. கல்யாணமான புதிதில், அவங்க பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்ணினேன். அன்னிக்கு ஷூட்டிங் இருக்குன்னு பொய் சொல்லிட்டு, நைட் 12 மணிக்கு ஃப்ரெண்ட்ஸ் உதவியோட, பால்கனி வழியா வீட்டில் ஏறிக் குதிச்சு, பெட்ரூமில் கேக்கோடு நுழைஞ்சேன். 'ஹேப்பி பர்த் டே’னு சந்தோஷமா கத்தினேன். கண் முழிச்சுப் பார்த்தவங்க, அப்படியே கரகரன்னு அழுதுட்டாங்க. நானும் ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன். ஃப்ரெண்ட்ஸை வரச் சொல்லி, பிறந்த நாளைக் கொண்டாடி முடிச்சோம். கடைசியா 'ஏம்மா அழுதே?’னு பாசமா கேட்டேன். 'நீங்க இருட்டுல வந்து நின்னதால, பயத்துல அழுதுட்டேன்!’னு சொன்னாங்க பாருங்க... நொந்துட்டேன்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''எவ்வளவு அழகா பால் பொங்குது பாருங்க?''

மகாலஷ்மி: ''எங்களுடையது பக்கா லவ் மேரேஜ். அனில்குமாருக்கும் எனக்கும் காதலும் மோதலும் சர்வசாதாரணமா வரும். ஒரு மாசத்துக்கு முன்னாடி எங்க கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு முதல் நாள் ரெண்டு பேருக்கும் சண்டை வந்திருச்சு. கோபத்துல போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவெச்சுட்டேன். மறு நாள் வரைக்கும் அவர்கிட்ட பேசவே இல்லை. எங்களுடைய திருமண வழக்கப்படி மணமக்களுக்கு நடுவே ஸ்கிரீன் போட்ருவாங்க. தாலி கட்டும்போதுதான் திரையை விலக்குவாங்க. அதுவரை கோபமா இருந்த நான், ஸ்கிரீனை விலக்கினதும் என்னை அறியாம சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். அவரும் கையில் தாலியை வெச்சுக்கிட்டு அடக்க முடியாம சிரிக்கிறார். செம ஜாலியா நடந்து முடிஞ்சது எங்க கல்யாணம்!''

''எவ்வளவு அழகா பால் பொங்குது பாருங்க?''

கீர்த்தி: ''நான் 10-வது படிக்கும்போது ஜப்பானில் 'எக்ஸ்போ 2000’னு ஒரு டான்ஸ் புரொகிராம் நடந்தது. என் அம்மா ஜெயந்தி ஒரு டான்ஸ் மாஸ்டர்ங்கிறதால என்னை அனுப்பி வெச்சாங்க. அங்க 45 நாள் நடந்த விழாவில் சரியா சாப்பிடாம ரொம்பவே மெலிஞ்சிட்டேன். எங்க வீட்டில் 'எனக்கு உடம்பு சரியில்லை’னு ஒரு மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் ரெடி பண்ணி ஸ்கூலில் கொடுத்துட்டாங்க. மெலிஞ்சி வந்த என்னைப் பார்த்ததும் டீச்சர்ஸ் உண்மைனு நம்பி ஏமாந்துட்டாங்க. ரொம்பப் பரிதாபப்பட்டு விட்டுப்போன பாடங்களை அக்கறையா சொல்லிக் கொடுத்தாங்க. ஒருவழியா ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணினேன். ஏமாத்தினதுக்காக ஸாரி டீச்சர்ஸ்!

''எவ்வளவு அழகா பால் பொங்குது பாருங்க?''
''எவ்வளவு அழகா பால் பொங்குது பாருங்க?''

ஈரோடு மகேஷ்: ''முதன் முதலா ஸ்ரீதேவியை ஒரு புரொகிராமில் பார்த்தேன். ஃப்ரெண்ட் ஆனதும் ஒருநாள் சரவணபவனில் சந்திச்சோம். தனக்கு எக்கச்சக்கமா ஆர்டர் பண்ணினவங்க, வெறும் வெங்காய பஜ்ஜி சாப்பிட்ட என் தலையில் பில்லைக் கட்டிட்டாங்க. அப்போதான், 'கல்யாணம் பண்ணினா அது இந்தப் பொண்ணுதான்’னு முடிவு பண்ணினேன். கல்யாணத்துக்குப் பின்னாடி மத்தவங்களுக்கு ஆப்பு வெச்சு, நம்ம பணத்தை மிச்சம் பிடிப்பாங்க (எப்பூடி). கல்யாணத்துக்கு ரெண்டு பேர் வீட்லயும் பயங்கர எதிர்ப்பு. ஒரு வருஷம் காத்திருந்து, வீட்டுப் பெரியவங்க ஆசீர்வாதத்தோட ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போதான் மேடம் சமைக்கக் கத்துக்கிறாங்க. சாதாரணமா பால் காய்ச்சினாலும் 'ஐய்ய்ய்... எவ்வளவு அழகாப் பால் பொங்குது பாருங்க’னு டார்ச்சர் கொடுக்குறாங்க!''