நவம்பர் 8-ம் தேதி புதிய கே.டி.எம் பைக்குகள் அறிமுகம்

வரும் நவம்பர் 8-ம் தேதி புதிய KTM பைக்குகள் இத்தாலியில் நடக்க உள்ள EICMA ஷோவில் அறிமுகமாக இருக்கின்றன. புதிய பைக்குகளுக்கான டீசர் வீடியோ, கேடிஎம் தளத்தில் உள்ளது. இப்போதைக்கு முழு LED ஹெட்லைட்டுகள் மட்டுமே டீசரில் காட்டப்பட்டுள்ளது. 

 

2017 200 டியூக், 390 டியூக் பைக்குகள் முன்பைவிட மிரட்டலாக இருக்குமாம். சூப்பர் டியூக் பைக் டிசைனை அடிப்படையாகக் கொண்டு இந்த பைக்குகளை வடிவமைத்துள்ளார்கள். நிறைய எலெக்ட்ரானிக் வசதிகள் இரு பைக்குகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனவாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!