Published:Updated:

மவுலிவாக்கம் கட்டடங்கள்... இடிந்தபோதும்... இடித்தபோதும் நிகழ்ந்தது என்ன...? #Infograph

மவுலிவாக்கம் கட்டடங்கள்... இடிந்தபோதும்... இடித்தபோதும் நிகழ்ந்தது என்ன...? #Infograph
மவுலிவாக்கம் கட்டடங்கள்... இடிந்தபோதும்... இடித்தபோதும் நிகழ்ந்தது என்ன...? #Infograph

2014, ஜூன் 28 கனமழை என்றெல்லாம் சொல்லமுடியாது. மவுலிவாக்கத்தில் மிதமான மழைதான். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை... விடுமுறை நாள் என்பதால், அந்த வாரத்துக்கான கூலியைப் பெற்ற கட்டடத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியான அடுத்த நாளைச் செலவிடத் திட்டமிடுகிறார்கள். சொல்ல முடியாது, பெரும்வாரியாக இருந்த ஆந்திரத் தொழிலாளர்கள் அந்தச் சமயத்தில்  நாக சைதன்யா நடிப்பில் வெளியான தெலுங்குப் படமான, ’ஆட்டோநகர் சூர்யா’ படம் பார்க்கத் திட்டமிட்டிருக்கலாம்... சிலர், தங்கள் குழந்தைகளுக்கு புது ஆடை வாங்கத் திட்டமிட்டு இருக்கலாம்... வெளியே சென்று உணவருந்தத் திட்டமிட்டிருக்கலாம்.... ஆனால், ஊழல், விதிமீறலால் முளைத்த மண்ணால், சிமென்டால் ஆனக் கட்டடத்துக்கு இதுவெல்லாம் எப்படித் தெரியும்...?  சில நிமிடங்களில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கனவுகள் எல்லாம் மழையில் கரைந்துபோனது.எங்கும் மரண ஓலம்... கண்ணீர்...!

மவுலிவாக்கத்தில் இடிந்த கட்டடத்துக்கு அருகே இருக்கும் இன்னொரு கட்டடமும் தரமற்றதாக இருக்கிறது என்று 61 தொழிலாளர்கள் இறந்தபின், அரசு தன் ஆய்வைச் சொல்கிறது. அதை இடிக்கத் திட்டமிடுகிறது... அதை பொக்லைன் கொண்டு இடித்தால் பெரும் சேதம் உண்டாகும்... என்ன செய்யலாம்... என்ற நீண்ட விவாதத்துக்குப் பின் உள்வெடிப்பு முறையில் வெடிக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறது. மூன்று மாத முன் தயாரிப்புக்குப் பின்... 50 தொழிலாளர்கள், சில குண்டுகள் பின் ஒரு கணினி துணையுடன்  நவம்பர் 2, 2016 அந்தக் கட்டடம் சில நொடிகளில் தகர்க்கப்படுகிறது. இப்போது நேரலை, மீம்ஸ், செல்ஃபி...!

நிகழ்ந்த, இல்லை... இல்லை... நிகழ்த்தப்பட்ட இரு சம்பவங்களையும் விளக்கும் வரைகலை (Infograph) வடிவம் கீழே...

அதன் ஆங்கில வடிவம் 

- ந.ப. சேதுராமன்  | Infograph : ஆஃரிப் முகமது