வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (07/11/2016)

கடைசி தொடர்பு:10:16 (07/11/2016)

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பிறந்த தின சிறப்பு பகிர்வு!

கல்வியில் கரை கண்டவர்:

தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் உள்ள 1888-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி பிறந்தார். இவர் தந்தை ஒரு இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றினார். இவரின் தந்தை விசாகப்பட்டினத்தில் பணியாற்றியதால் அங்கேயே பள்ளி படிப்பை முடித்தார். தன்னுடைய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து சிறப்பு தகுதியுடன் பட்டம் பெற்றார். இவர் முதுகலை படிப்பில் சாதனை மதிப்பெண்களை பெற்றார்.

இந்திய இயற்பியலில் சிறந்து விளங்கியவர்:

1907-ம் ஆண்டு நடைபெற்ற நிதித்துறை தேர்வில் முதலிடம் பெற்று கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறையில் தலைமை அலுவலராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். நிதித்துறையில் பணியாற்றினாலும் அவரின் கவனம் முழுவதும் அறிவியலில் ஆய்வுகள் செய்வதிலேயே இருந்தது. அதற்காகவே தன்னுடைய வீட்டில் அறிவியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கியும் வைத்து இருந்தார். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை அறிவியல் ஆய்வகத்திலேயே கழித்தார். நிதித்துறை பணியில் இருந்து பத்து ஆண்டுகளுக்கு பின்பு அதவாது 1917-ம் ஆண்டு நிதித்துறை பணியை விட்டு விலகி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். 1933-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் இயக்குநராக பணியாற்றினார். இந்த நிறுவனத்தில் பணியாற்றிய முதல் இயக்குநரும் இவரே. தன்னுடைய பெயரில் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிறுவனத்தை 1943-ம் ஆண்டு தொடங்கினார்.

ராமன் விளைவு:

 1928-ம் ஆண்டு சர்.சி.வி.ராமன் பல்வேறு சோதனைகள் மூலம் ராமன் விளைவை கண்டறிந்தார். ராமன் விளைவு பற்றி கண்டறிய  ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு தோல்விகளுக்கு பின்பு தான் ராமன் விளைவு கண்டறியப்பட்டது. ஒரிரு நாட்களில் எளிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. ராமன் முதன் முதலாக கடல் வழியாக ஐரோப்பா பயணம் செய்தபோதுதான் ராமன் விளைவு பற்றிய ஆய்வைத் தொடங்கினார். ஓளிச்சிதறல் பற்றிய இவரின் பெயராலேயே அழைக்கப்படும் ராமன் விளைவை கண்டுபிடித்தற்காக 1930-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வாழ்க்கையின் கடைசி வரை ஆய்வுகள்:

இவரின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பாராட்டி 1929-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது, ஆனால் இவர் தன்னுடைய பெயருக்கு முன் சர் என்ற பட்டத்தை பயன்படுத்த விரும்பவில்லை. அறிவியலிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் கொண்ட ராமன் தன்னுடைய எண்பத்தி இரண்டாம் வயது வரை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார். இவரின் மரணம் தான்  இவரின்  தனது ஆய்வுகளுக்கு ஓய்வை தந்தது. இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகள் இன்றும் அறிவியல் இயற்பியல் மற்றும்  தொழிற்துறை போன்ற பல்வேறு துறைகளில் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவ்வுலகில் இயற்பியல் துறை இருக்கும் வரை சர்.சி.வி.ராமன் பெயரும் உச்சரிக்கப்படும் என்பதில் துளியும் ஐயம் இல்லை எனலாம்.


லோ.பிரபுகுமார்
மாணவப் பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க