
நாடு முழுவதும் ஐந்து அனல்மின் நிலையங்களை மூட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் சில இடங்களில் மாசுக்காற்று பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி உள்பட ஐந்து மாநிலங்களில் அனல்மின் நிலையங்களை மூட தேசிய பசுமைத்தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல், காற்று மாசுபாட்டைக் குறைக்க டெல்லியில் பத்து ஆண்டுகளான டீசல் வாகனங்கள் மற்றும் பதினைந்து ஆண்டுகளான பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் தடைவிதித்தும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது.