‘‘சென்னை எனக்கு லக்கி சிட்டி!’’

சே  ப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள டென்னிஸ் கோர்ட்! மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் நடத்திய, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய டென்னிஸ் போட்டியின் ஃபைனல். உயரமும், வேகமுமாக இருக்கிற பாலாஜி ஸ்ரீராம், சண்டிகரின் அபிஜித் திவாரியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வெல்கிறார். இந்தப் போட்டியில் ஒற்றையர் பிரிவிலும், இரட்டையர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஒரே தமிழன் பாலாஜிதான்!

‘‘எனக்குச் சொந்த ஊர் கோவை. வீட்டுக்குப் பக்கத்துல ஒரு டென்னிஸ் கோர்ட் இருந்தது. தினம் டென்னிஸை வேடிக்கை பார்த்ததுல, அந்த விளையாட்டு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நேரா அப்பாகிட்ட போய், ‘நான் டென்னிஸ் ப்ளேயரா ஆகப்போறேன்’னு சொன்னேன். அவ்வளவுதான்... அடுத்த நிமிஷம் கோச்சுக்கு போன் பண்ணி, அது சம்பந்தமா விசாரிக்க ஆரம்பிச்சுட்டார் அப்பா. அப்பாவோட ஊக்குவிப்புல, இப்ப நானும் ஒரு டென்னிஸ் ப்ளேயர். முதல்முறையா தென்னாப் பிரிக்காவுல 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில கலந்துக்கிட்டேன். அடுத்ததா, ஆஸ்திரேலியாவில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு போட்டியிலும், மலேசியாவுல நடந்த ஜூனியர் டேவிஸ் கோப்பைப் போட்டியிலும் விளையாடினேன். அந்தப் போட்டிகள்ல ரேங்க் வாங்கினேனே தவிர, சாம்பியன்ஷிப் வாங்க முடியலை. அதுக்குதான் இந்த ரெண்டு வருஷமா தீவிரமா கோச்சிங் எடுத்துட்டு இருக்கேன்.

போன வருஷம் டெல்லி நேஷனல் டென்னிஸ் போட்டியில சாம்பியன். இந்த வருஷம் சென்னையில சாம்பியன். இந்த வெற்றிகள் நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கு. உடம்பை ஃபிட்டா வெச்சுக்கறதுக்காக பாஸ்கெட் பால் விளையாடிட்டு இருக்கேன். இப்ப எனக்குப் 17 வயசாகுது. ஆறடி உயரம் இருக்கேன். உடம்பு, மனசு ரெண்டுமே நம்பிக்கை தருது. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு டேவிஸ் கோப்பை டென்னிஸ்ல விளையாடணும்கிறது என் டார்கெட்’’ என்கிறார் பாலாஜி, நெற்றி வியர்வையைத் துடைத்தபடியே!

ஒற்றையர் பிரிவு பெண்கள் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது, டெல்லியைச் சேர்ந்த பிரேர்னா. அவரின் முதல் சாம்பியன் பட்டம் இதுதான்.

‘‘எனக்கு இப்ப வயசு 15. நான் இதுவரைக்கும் 16 வயதுக்கு உட்பட் டோர் பிரிவுலதான் விளையாடியிருக்கேன். இங்கேதான் சீனியர்ஸ்கூட முதல் தடவையா விளையாடினேன். சென்னை என்னோட லக்கி சிட்டி! 2006-ல் சென்னையில் நடந்த போட்டி யில் காலிறுதி வரை ஜெயிச்சேன். அந்த உற்சாகத்துல அடுத்த சில போட்டிகள்ல ஜெயிச்சேன். இந்த வருஷம் சென்னை எனக்கு சாம்பியன் ஷிப்பையே தந்திருக்கு. புது நம்பிக்கை வந்திருக்கு. இந்த வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டேன். தேங்க்ஸ் டு சென்னை!’’ என்கிறார் பிரேர்னா நெகிழ்ச்சியாக.

தமிழக பெண்கள் டீமின் ஒரே ஆறுதல் கெஸ்லி சுந்தரம். பெண்கள் இரட்டையர் பிரிவில் கெஸ்லிதான் சாம்பியன்.

‘‘நாலு வருஷத்துக்கு முன்னாடிதான் டென்னிஸ் எனக்கு அறிமுகம். போன வருஷம் டெல்லியில நடந்த தேசிய அளவிலான போட்டி யில் ஃபைனல் வரை வந்தேன். இந்த வருஷம் அமெரிக்காவுல நடந்த ரெண்டு போட்டிகள்ல கலந்துகிட்டு, முதல் சுற்று வரைக்கும் ஜெயிச்சேன். என் விளையாட்டைப் பார்த்த ‘ஜான் நியூகோம்ப்’ங்கிற டென்னிஸ் அகாடமி எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்திருக்காங்க. அதனால வர்ற டிசம்பர்ல அமெரிக்கா கிளம்பிடுவேன். நாலு வருஷத்துக்குள்ள இன்டர் நேஷனல் ரேங்க் வாங்கணும். அதுக்கு அப்புறம்தான் இந்தியா வுக்கே வருவேன். இதை உங்க செல்போன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க!’’ - தம்ஸ்-அப் காட்டிச் சிரிக்கிறார் கெஸ்லி.

ஆல் தி பெஸ்ட்!

\ எஸ்.கலீல்ராஜா
படங்கள்: ‘ப்ரீத்தி’ கார்த்திக்