வெளியிடப்பட்ட நேரம்: 08:16 (21/11/2016)

கடைசி தொடர்பு:19:55 (21/11/2016)

நம் வீரத்தை காட்டிய ரேஸிங் விளையாட்டுகள்! #Throwback

விளையாட்டா வீரத்தை காமிச்சவங்கள விட, வீரத்தை விளையாட்டுல காமிச்சவங்கதான் அதிகம்.  நீங்கள் 1990-களில் பிறந்தவரா? உங்களது பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்லும் ரேஸிங் கேம்கள் இவைதான்!

ரோடு ரேஷ் (1991): 

ரேஸிங்

1990-களில் பிறந்தவராக இருந்துவிட்டு, ரோடு ரேஷ் (Road Rash) கேமை இதுநாள் வரையில் விளையாடியது இல்லை என்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அத்தியாவசிய விஷயம் ஒன்றை இழந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். ''Vehicular Combat Racing'' பிரிவில் வரும் இந்த விடியோ கேம், எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் (Electronic Arts) நிறுவனத்தின் தயாரிப்பாகும். MB அளவில் இது மிகக் குறைவாகவே இருந்ததால்,  கிராஃபிக்ஸ் கார்டு இல்லாத கம்ப்யூட்டர்களில்கூட இந்த கேம் சிக்கலின்றி செயல்பட்டது. 1990-களில் தங்களது டீன் ஏஜ் பருவத்தில் இருந்த பலருக்கும், தங்களுக்குள் இருந்த கேமரை உணர்த்தியது ரோடு ரேஷ்தான். பழமையான ரேஸ் டிராக், சாலைகளில் செல்லும் நபர்கள்/வாகனங்களின் மீது மோதுவது, நம்முடன் ரேஸ் ஓட்டுபவர்களை மிதித்துத் தள்ளுவது, சாலையில் வேகமாக பைக் ஓட்டியதற்காக நம்மைத் துரத்தும் போலிஸ்காரரை பேஸ்பால் பேட் - சைக்கிள் செயின் போன்ற ஆயுதத்தால் தாக்குவது என ஒரு பக்கா பேக்கேஜாக இருந்தது ரோடு ரேஷ். இந்த கேமின் மியூசிக், ரேஸர்களின் பெயர்கள், கேம் அமைக்கப்பட்ட விதம் ஆகியவை, காலங்களைக் கடந்தும் மறக்கமுடியாதவை என்றால் அது மிகையில்லை!

ரோடு ஃபைட்டர் (1984): 

1990-களில் பிறந்தவர்கள், தமது வாழ்க்கையின் 15 வருடங்களுக்கு முன்னால் சென்றால், ரோடு ஃபைட்டர் (Road Figher) கேமின் 8 பிட் MIDI சத்தம், உங்கள் காதுக்குள்ளே இந்நேரத்தில் ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கும். ஸ்கிரீன் சைஸ் சிறிதாக இருந்தாலும், அளவில் பல்க்காக இருக்கும் CRT வகை டிவிக்களில், விடியோ கேம் செட்டை கனெக்ட் செய்து, ஜாய் ஸ்டிக்கை ஒற்றைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடினால், நேரம் செல்வதே தெரியாது. Arcade வகை விடியோ கேமான இதை, Konami நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் நாம் கன்ட்ரோல் செய்யும் சிவப்பு நிறக் கார், சாலையின் குறுக்கே ஆங்காங்கே இருக்கும் எண்ணெய் திட்டுகளையும், மற்ற வாகனங்களையும் இடிக்காமல் வேகமாகச் செல்ல வேண்டும். எனவே கொடுக்கப்பட்ட நேரம் மற்றும் எரிபொருளில், ஃப்னிஷ் லைனை அடைந்தால் வெற்றி! ரேஸின் இடையே வரும் கலர்ஃபுல்லான காரை நாம் இடித்தால், நமக்குக் கூடுதலாக எரிபொருள் கிடைக்கும். புல் தரை, கடற்கரைக்கு இடையே இருக்கும் பாலம், மலைகள், காடுகள் சூழ்ந்த பகுதி ஆகியவற்றில் ரேஸ் டிராக் அமைக்கப்பட்டு இருக்கும். 

மிட் டவுன் மேட்னெஸ் (1999): 

Blitz, Circuit, Checkpoint, Cruise - இந்த வார்த்தைகளை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா? இவைதான் மிட் டவுன் மேட்னெஸ் (Mid Town Madness) கேமில் இருந்த சிங்கிள் ப்ளேயர் மோடுகள் ஆகும். Arcade வகை விடியோ கேமான இது,  மனநிறைவைத் தருவதில் பெயர் பெற்றது. சிகாகோ நகரத்தில் அமைக்கப்பட்ட இந்த கேமின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஸ்ட்ரீட் ரேஸில் பங்கேற்று, அதில் வெற்றி பெற்று போட்டியாளர்களின் காரைப் பெறுவதுதான். க்ரூஸ் மோடில் கார் ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. தவிர நெரிசம் மிகுந்த சாலைகளில், நமக்குப் பிடித்தமான ஃபோக்ஸ்வாகன் பீட்டில் முதல் சிட்டி பஸ்/டிரக் வரை எதை வேண்டுமானாலும் நாம் ரேஸில் ஓட்டலாம். எனவே சாலையில் செல்பவர்கள் குழம்பிப் போவார்கள். அதைப் பார்த்து நாம் அவர்கள் மீது வாகனத்தை ஏற்ற முயன்றால், அவர்கள் எஸ்கேப் ஆகும் விதம் அழகு. விண்டோஸ் இயங்குதளத்துக்காகத் தயாரிக்கப்பட்ட இந்த விடியோ கேமை, ஏஞ்சல் ஸ்டூடியோஸ் (Angel Studios) வடிவமைத்திருந்தது. மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் இதனை வெளிக்கொண்டுவந்தது.

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ: வைஸ் சிட்டி (2002)

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (GTA - Grand Theft Auto) கேமை விளையாடியவர்கள், நிஜத்தில் டிராஃபிக் ஜாமை அழகாக டீல் செய்வார்கள். GTA சிரீஸ் கேம்களில் மாஸ்டர் பீஸாக வைஸ் சிட்டி (Vice City) கருதப்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. வைஸ் சிட்டி தொடங்கி மியாமி நகரம் வரையிலான இரண்டு தீவுகளில், நமக்குப் பிடித்தமான வாகனத்தில் நகர்வலம் வரலாம். எனவே விமானத்தை கடத்துவது, சாலையில் செல்பவர்களுடன் சண்டை போடுவது/சுட்டுத் தள்ளுவது, கோஷ்டி மோதல், பணத்துக்காக மற்ற வாகனங்களுடன் ரேஸ் ஓட்டுவது, போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை வாங்க/விற்க என எதை வேண்டுமானாலும் செய்யலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால், மாஸ் ஆக்‌ஷன் எபிசோட்களாக இருந்த இந்த கேமில், நாம் காட்ஃபாதர்/கபாலி போல நகரத்தின் டானாக உருவாக முடியும்.  Rockstar San Diego ஸ்டூடியோ வடிவமைத்த இந்த கேம், இசை, கேம் அமைக்கப்பட்ட விதம், விஷுவல்கள் ஆகியவற்றுக்காக கேம் ஆர்வலகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. ஆனால் கேமை விளையாடுபவர்களின் மனதில் வன்முறை மற்றும் ஜாதி வேறுபாடுகளை இது விதைப்பதாக சர்ச்சை நிலவியதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

இந்தக் கால போக்கிமான்களையும் விட இவற்றிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

-ராகுல் சிவகுரு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்