Published:Updated:

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வருகிறதா டோல் ஃப்ரீநம்பர்?

Vikatan Correspondent
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வருகிறதா டோல் ஃப்ரீநம்பர்?
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வருகிறதா டோல் ஃப்ரீநம்பர்?
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வருகிறதா டோல் ஃப்ரீநம்பர்?

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி, ஏற்கெனவே டிஜிஷாலா என்ற சேனலும், CashlessIndia என்ற இணையதள பக்கமும் துவக்கப்பட்டது. இந்த சேனலில் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இணையதள பக்கத்திலும் இதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இதுதொடர்பாக உதவிக்கு, மத்திய அரசு 14444 என்ற டோல் ஃப்ரீ நம்பரையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு இந்த டோல் ஃப்ரீ நம்பரை அறிமுகப்படுத்தும் என்கின்றனர்.