Published:Updated:

வர்தா புயல்: இலவச உதவி எண்கள் அறிவிப்பு

Vikatan Correspondent
வர்தா புயல்: இலவச உதவி எண்கள் அறிவிப்பு
வர்தா புயல்: இலவச உதவி எண்கள் அறிவிப்பு

வர்தா புயல் அதிதீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் கனமழை உறுதி என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகப்படியாக 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 36 மணிநேரம் மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

வர்தா புயல்: இலவச உதவி எண்கள் அறிவிப்பு

வர்தா புயல் தற்போது சென்னையில் இருந்து 330 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் விமான நிலையம், கிண்டி, தியாகராயநகர், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது. அதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இந்தப் புயல் சென்னைக்கு அருகே நாளை கரையைக்கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கரையைக்கடக்கும் போது 100 கி.மீ. வேகத்துக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வர்தா புயல் தொடர்பாக, உதவிக்கு எண்களை சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. 044-25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570. வாட்ஸ் அப் எண்கள் 9445477207, 9445477203, 9445477206, 9445477201, 99445477205. மின்னஞ்சல் முகவரி gccdm1@chennaicorporation.gov.in, gccdm2@chennaicorporation.gov.in,gccdm3@chennaicorporation.gov.in,gccdm4@chennaicorporation.gov.in,gccdm5@chennaicorporation.gov.in, இவைகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 1070 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.