Published:Updated:

ரூபாய் நோட்டு வாபஸ்... இந்த ஆண்டின் மிகப்பெரிய ஊழல்- ப.சிதம்பரம்

ரூபாய் நோட்டு வாபஸ்... இந்த ஆண்டின் மிகப்பெரிய ஊழல்- ப.சிதம்பரம்
ரூபாய் நோட்டு வாபஸ்... இந்த ஆண்டின் மிகப்பெரிய ஊழல்- ப.சிதம்பரம்
ரூபாய் நோட்டு வாபஸ்... இந்த ஆண்டின் மிகப்பெரிய ஊழல்- ப.சிதம்பரம்

மத்திய அரசால் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாப்பஸ் நடவடிக்கை இந்த ஆண்டின் மிகப்பெரிய ஊழல் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

,இதுகுறித்து சிதம்பரம், 'ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக, தீவிர விசாரணை நடத்த வேண்டும். 3 சதவிகிதம் இருக்கும் மின்னணு பரிமாற்றத்தை சில மாதங்களில் 100 சதவிகிதமாக மாற்ற முடியாது.' என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், 'பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்னர் யஷ்வந்த் சின்கா அல்லது மன்மோகன் சிங் போன்றவர்களிடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் யாரிடமும் கேட்காமல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். ஒரு இயற்கை பேரிடர் கூட இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது.' என்று பேசியுள்ளார்.