வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (14/12/2016)

கடைசி தொடர்பு:11:48 (14/12/2016)

குளோஸ் ஃப்ரெண்டு... கிறுக்கு ஃப்ரெண்டு... பக்கத்து வீட்டு ஃப்ரெண்டு! #Nanbendaa

ஃப்ரெண்டு


இந்த ஜென் Z-க்கு ஃபிரெண்ட்ஸ் இல்லாத லைஃப், தண்ணி இல்லாத பைப் மாதிரி. ஜியோ சிம்கார்டு மாதிரி அன்லிமிட்டடா அன்பக் கொட்டும் இவங்க கூட ட்ராவல் பண்றதே ஒரு ரகளையான அனுபவம். எவ்வளவு கோபப்பட்டாலும் திரும்ப வந்து பேசறது, விக்கல், தும்மலுக்கு கூட ட்ரீட் கேக்கறதுனு இந்தக் கெமிஸ்ட்ரிக்கு இருக்கும் வரலாற எட்டு எட்டா கணக்குப் பண்ணிடலாம்... 

1. குளோஸ் ஃப்ரெண்டு: 

நம்மளப் பத்தி அ முதல் ஆஹா வரை எல்லாம் தெரிஞ்சு நம்மள குளோஸ் பண்றவங்கதான் இந்த குளோஸ் ஃப்ரெண்டு. "பிடிச்சிருந்தா பாரு பிடிக்கலனா எந்திரிச்சு ஓடு!"னு கே.எஸ்.ஆர் மாதிரி என்னாதான் விரட்டினாலும், மிரட்டினாலும் ஏ.டி.எம்ல 100 ரூபாய் வர்றதப் பார்த்த மாதிரி சிரிச்சிகிட்டே நம்மகூடவே இருப்பாங்க. நம்மள விட்டு கொடுக்காத குறை சொல்லாத இவங்க, அச்சம் என்பது மடமையாடா சிம்புக்கு ஒரு சதீஷ் மாதிரி. உசுரக்குடுப்பாய்ங்க....

2. கிறுக்குத்தனமான ஃப்ரெண்டு: 

நாம எப்பவும் நம்மள சுத்தி மெல்லிசான கோட்டை வளைச்சு ஒரு சர்கிள் வரைஞ்சு வெச்சி அதுக்குள்ளயே நாமளும் நிப்போம். நம்ம மண்டைல தட்டி அதுல இருந்து வெளிய கொண்டு வரவங்க தான் இந்த டைப் ஃபிரண்ட்ஸ். முட்டுனா கொம்பு முளைக்கும், எறும்பு சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது, தக்காளில இருந்து கரண்ட் எடுத்து மொபைலுக்கு சார்ஜ் போடுறதுனு புதுசு புதுசா அறிவியல் கண்டுபிடிப்புகளக் கண்டுபிடிச்சிட்டே இருப்பானுங்க. விஷயத்த தினமும் இவங்க கிட்ட கத்துகிட்டே இருப்போம். ஊற வெச்ச துணிய துவைக்கலயே, பின் வீல்ல காத்து கம்மியா இருக்கேனு சின்னச் சின்ன விஷத்துக்கெல்லாம் டென்ஷனாகும் நமக்கு இவனுங்களோட சேர்ந்து பண்ணும் லூசுத்தனம் எல்லாம் பொக்கிஷ மெமரீஸ். 

3. பட்டு டப்பு ஃப்ரெண்டு: 

இவனுங்கள மாதிரி ஃபிரெண்ட்ஸ் கிடைக்க  எட்டு ஜென்மமா (மொத்தம் ஏழுதானோ, அட விடுங்க டியுட்) மலை உச்சியில நின்னு மா தவம் பண்ணியிருக்கணும். நாம செய்யற செயல் நல்லா இல்லைனா, தப்பா இருக்குனு உடனே சொல்லி உஷார் ஆக்குவாங்க. ஐயோ இவன் பேசிட்டே இருக்கும்போது காதக் கடிச்சிருவானேனு, தப்ப சுட்டிக் காட்டாம இருக்கவங்க மத்தியில் இவங்க ஒரு காஸ்ட்யூம் மாத்திட்டு வந்த கடவுள் போல!


4. அட்வைஸ் அலர்ட் ஃப்ரெண்டு:

"வாழ்க்கைங்கறது வானவில் மாதிரி, வளைஞ்சு நெளிஞ்சு இருந்தாலும் கலர்ஃபுல்லா இருக்கும். ஆனா, மழை பெய்யிறப்ப தான் வரும்"னு வாய்க்கு வந்ததை அடிச்சுவிட்டு அட்வைஸ் பண்ணுவானுங்க. அப்போ தான் தோணும், இவ்வளோ மொக்கையா அட்வைஸ் பண்றவனுங்களே உலாத்துறப்போ, நமக்கெல்லாம் என்ன கேடுனு. அப்சட் ஆகி இருக்கற நேரத்துல இதுதான் நம்பிள்கி எனர்ஜி கொடுத்து நிக்க வைக்கும். அட்லிஸ்ட் உட்காரவாது வைக்கும். அப்பிடி தெம்பா உட்காரும் போது 'மச்சி இப்போ இதக் கேளேன்'னு டியர் ஜிந்தகி ஷாரூக் மாதிரி ஃபீல் பண்ணி இன்னொரு அட்வைஸ்ல அரள வைப்பாணுங்க... இதுல இவனுங்கல்லாம் வேற லெவல். 

5. வேற்று கலாசார ஃப்ரெண்டு:

 நம்முடையது தான் கலாசாரம் நினைக்கவிடாம பண்றது இவனுங்க தான். மத்த ஊர் மாடு எல்லாம், சின்னம்மான்னா கத்துது... ம்ம்மானு தான் கத்தும்னு புரிய வெப்பானுங்க. என்ன மாநிலம்னு கேட்காம தண்ணி கேன் தீர்ந்ததும், தண்ணி கொடுத்து தாகம் தீர்ப்பானுங்க. பிரெண்ட்சா இருக்கனுமேனு இருக்கா, டேய் நொன்னைகளானு சசிக்குமாருக்கே டஃப் கொடுக்கும் நட்பு உள்ளவங்களா இருப்பானுங்க...


6. ஆப்போசிட் ஜென்டர் ஃப்ரெண்டு: 

 பொண்ணுங்கன்னா லிப்ஸ்டிக், ஐலைனர் மட்டும் இல்லனு பசங்களுக்கும், பசங்கன்னா ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ, பாலாபிஷேகம் மட்டும் இல்லனு கத்துக் கொடுக்கும் ஃப்ரெண்ட். நம்ம ஹேர் ஸ்டைல்ல இருந்து நம்ம நடக்கற விதம் வரை  தெரிஞ்சுகிட்டு 'இதுக்கு லைக்ஸ் வருவது கடினம் ஃப்ரெண்ட்'னு நம்மள அப்டேட் பண்ண உதவுவாங்க. நமக்கு சின்ன பிரச்னை வந்தா கூட இவங்க பெருசா எடுத்துகிட்டு, காதும்மா ஆர் யூ ஓகே பேபினு சொல்றதும், தெறி பேபினு பாராட்றதும்னு.... லவ்வர், அண்ணன், தங்கச்சி இல்லாம அதையும் தாண்டி புனிதமான ரிலேஷன்ஷிப் இது..


7. பக்கத்து விட்டு ஃப்ரெண்டு: 

அண்ணன் தம்பி மாதிரி உரிமை எடுத்துகறதுல இவங்கள அடிச்சிக்க முடியாது. காலைல சாப்ட்ட உளுந்த வடைல ஆரம்பிச்சு, உலக சினிமா, தீவிர இலக்கியம், மூலிகைல இருந்து பெட்ரோல் எடுக்கறதுனு எதப்பத்தி பேசினாலும் சுவாரஸ்யமா பேசிட்டே இருக்கலாம். நம்மள விடச் சின்னப் பசங்களா இருந்தா எண்டர்டெயின்மென்ட்டே வேற லெவல், அடுத்து எங்க படிக்கனு கூட கேட்டுதான் சேருவாங்க. என்ன ஒன்னு பேசிட்டே இருக்கும்போது "ண்ணா, சரி அம்மா கொழம்பு கிண்ணத்தை வாங்கிட்டு வர சொல்லுச்சி"னு  படார்னு கேக்கறது தான் சோகம் ஆஃப் இண்டியா...

8. வர்க் அண்ட் பேசன் ஃப்ரெண்டு: 

நாம பாதி நேரம் வேலை பத்தி பேசி இவங்க கூட தான் அதிக நேரம் லிவிங்ஸ்டன். பெர்சனல் தாண்டி ப்ரஃபஷன் வழியா அடுத்த கட்டத்துக்கு நம்மள அலேக்கா துக்கிட்டுப் போறது இந்தப் தோஸ்த்து படா தோஸ்த்து தான். வேலைல கஷ்டம்னாலும் சரி, வேற வேலைக்குப் போறதுனாலும் சரி இவங்க கொடுக்கும் கான்டாக்ட்ஸும், கைடன்சும் முரட்டுத் தனமா இருக்கும். இவ்வாறாக இந்த எட்டு பிரெண்ட்ஸ்ச ஃபாலோ பண்ணா நாம எங்கயோ போகலாம். இப்போதைக்கு நெக்ஸ்ட் ஃபேஜாவது போகலாம்...

- க.மணிவண்ணன்
மாணவப் பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்