Published:Updated:

இறைச்சியை மென்று சாப்பிடாவிட்டால் ஆபத்தே! - 75 வயதில் சிக்கலான அறுவை சிகிச்சை

Meat bone operated from 75 years old man's throat
Meat bone operated from 75 years old man's throat

இறைச்சியை மென்று சாப்பிடாததால் உணவுக் குழாய் பாதித்த 75 வயது முதியவருக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக சென்னை பில்ராத் மருத்துவமனை நடத்தியுள்ளது. இதுகுறித்து பில்ராத் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜேஷ் ஜெகநாதன் கூறியதாவது.

உணவுக்குழாயில் சிக்கிய எலும்புத்துண்டு

"75 வயது முதியவர் ஒருவர் 3 நாட்களாக மார்பில் வலி மற்றும் உணவை விழுங்க அவதிப்படுவதாகக் கூறி பில்ராத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். 3 நாட்களுக்கு முன் இறைச்சி உண்டதிலிருந்து இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறினார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், இறைச்சி சாப்பிடும்போது அதிலிருந்த எலும்புத்துண்டு அவரது உணவுக்குழாயில் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் இது சுவாசக் குழாயிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது."

டாக்டர் ராஜேஷ் ஜெகநாதன்
டாக்டர் ராஜேஷ் ஜெகநாதன்

அறுவை சிகிச்சை

"இதையடுத்து எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் அந்த எலும்புத் துண்டை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உணவுக்குழாயில் எலும்புத் துண்டு சிக்கியிருந்ததால் அந்த முயற்சி கைக்கொடுக்கவில்லை. வேறு வழிகள் இல்லாததாலும், செப்டிசீமியா பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு உடனடி அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து கழுத்துப் பகுதியில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் உணவுக்குழாயில் சிக்கியிருந்த எலும்புத் துண்டும், அதனால் சீல் பிடித்த பாதித்த பகுதிகளும் அகற்றப்பட்டன. தொடர்ந்து ஓய்வுக்கு பின்னர் 5-வது நாளில் முதியவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்."

இறைச்சியை மென்று சாப்பிடாவிட்டால் ஆபத்தே! - 75 வயதில் சிக்கலான அறுவை சிகிச்சை

சமரசமே கிடையாது!

"நோயாளியின் வயது மற்றும் கடுமையான நோய்த்தொற்றைக் கருத்தில் கொண்டு, நுரையீரல்துறை நிபுணர் டாக்டர் மோகன் வெங்கட்ராமன், அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் பி.பதம் குமார், ஞானசேகர், இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணா கிருஷ்ணா ராஜா, மயக்க மருந்து நிபுணர் டாக்டர் ஜெய்குமார் ஆகியோர் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்."

"சம்பந்தப்பட்ட அந்த நோயாளி இறைச்சியை நன்றாக மென்று சாப்பிட்டு இருந்தாலோ அல்லது சரியான நேரத்தில் பல் மருத்துவரை அணுகியிருந்தாலோ தப்பித்திருக்கலாம். எந்தவொரு சூழ்நிலையிலும் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில், தேவைக்கேற்ற தரமான சிகிச்சையை வழங்குவதற்கான பணியில் நாங்கள் சமரசம் செய்து கொண்டதே இல்லை."

இறைச்சியை மென்று சாப்பிடாவிட்டால் ஆபத்தே! - 75 வயதில் சிக்கலான அறுவை சிகிச்சை

5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு...

"எமது தந்தை டாக்டர் வி. ஜெகநாதனின் வழிகாட்டுதலின் கீழ் உள்ள மருத்துவமனை இன்றுவரை காஸ்ட்ரோ என்டெரோலஜியில் சிறந்த மருத்துவமனையாகத் திகழ்ந்துவருகிறது. காஸ்ட்ரோ என்டெரோலஜி பிரிவில் தினமும் 100 பேருக்கு கிசிக்சை தரப்படுகிறது. 25 அறுவை கிசிச்சைகள் நடைபெறுகின்றன. இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளை நிர்வகித்த பெருமையைப் பெற்றுள்ளது. பில்ராத் மருத்துவமனை நிர்வாகம் அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் மிக உயர்ந்த தரமான சிகிச்சையை வழங்குவதை உறுதியளிக்கிறது." என்கிறார் பில்ராத் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜேஷ் ஜெகநாதன்.

மருத்துவ ஆலோசனைக்கு:- 7299404040 (செனாய் நகர்), 044-2464 3030, 8339 204040 (ஆர்.ஏ.புரம்) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு