2016-ம் ஆண்டு எப்படி? மீம்ஸ் வழி ஒரு ரீகேப்! #2016Rewind | 2016 Important happenings and memes about them

வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (17/12/2016)

கடைசி தொடர்பு:11:28 (17/12/2016)

2016-ம் ஆண்டு எப்படி? மீம்ஸ் வழி ஒரு ரீகேப்! #2016Rewind

மீம்ஸ்

2016ன் டாப் மீம்ஸ் சிலவற்றின் தொகுப்புக்கு இங்கே க்ளிக் செய்யவும்

இது நெட்டிசன்களின் காலம். அந்த அளவுக்கு நம்ம பசங்க அப்டேட்டாக இருக்கின்றனர்! செய்திகளை முந்தித் தருவதில் ஊடகங்களை விடவும் மேலோங்கு மாதிரி சோஷியல் நெட்வொர்க்ஸ் வளர ஆரம்பித்துவிட்டது. ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் இதில் முதல் இடத்தில் உள்ளது. 

இதுபோன்ற நெட் வழியாக வரும் செய்திகளுக்கு உடனே ரிப்ளை செய்துவிடும் வசதி உள்ளதால் மக்கள் பெரிதும் விரும்பி படிக்கக்கூடிய, அதிகம் புழக்கத்தில் உள்ள ஒரு ஊடகமாக இது மாறிவருகிறது. இந்த ரிப்ளை என்றொரு வார்த்தை சொன்னோம் பாருங்க!!! அப்படின்னா, மீம்ஸ்னு கூட ஒரு அர்த்தம் எடுத்துக்கலாம்!! ஒவ்வொரு வருஷமும் முடியும்போது, அந்த வருஷத்துல என்னலாம் நடந்துச்சுன்னு யோசிச்சு பார்க்கும் நமக்கு, இந்த வருஷம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்ஸோட ஹிஸ்ட்ரி போதும் போல. எத்தனை எத்தனை மீம்ஸ்!!!! எத்தனை எத்தனை விஷயங்கள்!!!! இந்த வருஷத்தோட சில சீரியஸ் விஷயங்களை மீம்ஸ் மூலமாக எப்படி இந்தப் பசங்க ஓட்டியிருக்கிறாங்கன்னு கொஞ்சம் கீழே பாருங்க!!!! 

இந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய பிரளயம் தான். ஜெயலலிதாவின் இறப்பு, வர்தா புயல், அப்போலோ ஹேக்கர்ஸ், சசிகலா பதவியேற்பு என அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளைக் கண்டு, எப்பா போதும்டா முடியல எங்களாலன்னு சொல்லிட்டாங்க மக்கள்!!!! இந்த மாசம் முழுவதும் டெம்ப்ளேட்டிற்குப் பஞ்சம் இல்லாம நம்ம பசங்க இருந்தாங்க! அம்மா மறைந்ததும் உடனே சசிகலா அடுத்துப் பதவியேற்றதும் இவங்கள முழுச் சந்திரமுகியா மாறி வேலை பார்க்க வைச்சிருச்சு! இது எல்லாம் பத்தாதுன்னு இந்த வர்தா புயல் வேற ஒரு பக்கம் வந்து சென்னைய சூறையாட, பசங்க வீட்ட காப்பாத்தினாங்களோ இல்லையோ, மீம்ஸ் போட்டு அப்டூடேட்டா இருந்துட்டாங்க!!!! உண்மைய சொல்லணும்னா, இவங்க போட்ட வர்தா மீம்ஸும், இடை இடையில உதவிக்கு எண்கள் கொடுத்ததும் பலருக்கு ஆறுதலா இருந்திருச்சு!!! 

இந்த ஆறுதல் ரக மீம்ஸ் எனச் சில உண்டு.... இந்த 2016ல் அந்த மாதிரியான மீம்ஸுகள் நிறையவே இருந்தது. எடுத்துக்காட்டுக்கு சொல்லணும்னா, சிங்கிள் பாய்ஸிற்கான மீம்ஸ், வேலையில்லா பட்டதாரிகளுக்கான மீம்ஸ், மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் அவங்களுக்கு அவங்களே போட்டுக்கொள்ளும் மீம்ஸ்... அதுலயும் நீயா நானா ஷோவிற்குக் கூப்பிட்டதற்கு இவங்க போட்ட கோபிநாத் மீம்ஸ் இருக்கே..... ம்ம்!!!!  அச்சம் என்பது மடமையடா படம் வந்த பிறகு வீட்ல பைக் கேட்டா அப்பா என்ன சொல்றாருங்கறத ஒரு கான்ஸெப்ட்டா பண்ணாங்க பசங்க!!! அப்பாக்கள் எப்போலாம் திட்டுவாங்க, எப்படியெல்லாம் அம்மா அப்போ நம்மளை காப்பாத்துவாங்கணு இவங்களுக்கு அத்துப்பிடி!!! 

ஒரு சில சிறப்புத் தேதிகள், சிறப்பு மாதங்கள்னு ஸ்பெஷல்ஸ் இருக்கும். உதாரணமா, புரட்டாசி மாதம் முழுக்க ஒரு தனித்துவம் இருக்கும் (யெஸ், நோ நான்-வெஜ்), நவம்பர் முழுக்க நோ ஷேவ் நவம்பர்.... இப்படி மாதக் கணக்குத் தொடங்கிச் சிறப்பு நாட்கள் வரை இன்னைக்கு நாம வந்துட்டோம்!!! அதில் தீபாவளிக்கு பட்டாசு வேண்டாம்னு சொல்ல தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு பட்டாசுக்கும் ஒவ்வொரு டெம்ப்ளேட் உபயோகப்படுத்தியது, உலக ஆண்கள் தினத்திற்கு இவங்க செஞ்சது என எல்லாமே  மாஸ்!

ஒரு சில யூஸ்ஃபுல்லான விஷயங்களையும் நமக்குத் தருவார்கள்!!! உதாரணமா, TRUE CALLER மூலமா யார் ஃபோன் செய்றதுங்கறது கண்டுபிடிக்கிறது, பவர் பேங்க் என நாம் அன்றாடம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளும் இவங்க மீம்ஸ்லயும் இருக்கும். இவ்ளோ ஏன், நம்ம டோரா புஜ்ஜி கூட இந்த லிஸ்ட்டில் இருக்குதுன்னா பாருங்களேன்!

எப்போதுமே ஒரு படம் வந்தவுடனே அதுபற்றிய மீம்ஸ் போடுவது இவர்கள் வாடிக்கை. அந்த வகையில், தியேட்டருக்கே போகாமல் நீங்க ரிவ்யூ தெரிஞ்சுக்கலாம்.  இந்த வருஷம் வந்த படங்கள்ல, சமீபத்தில அதிகமா பேசப்பட்ட படங்கள், அச்சம் என்பது மடைமயடா, சிங்கம்-3, கடவுள் இருக்கான் குமாரு, பிச்சைக்காரன், கொடி, எம்.எஸ்.தோனி முதலியவைதான். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம்!கொலைப்பசி ஒரு ரகம்னா 500,1000 இன்னொரு ரகம்,... 

500,1000 னு சொன்னதுக்கு அப்புறம்தான் நியாபகம் வருது, மோடி அவர்பாட்டுக்கு இனிமே 500 ரூ 1000ரூபாய்லாம் செல்லாதுன்னு சொல்லிட்டாரு, விஷயத்தை எவ்வளவு சீரியஸாக்க முடியுமா அவ்வளவு சீரியஸ் ஆக்குனது நம்ம பசங்க தான்!!! மோடி அறிவித்த அடுத்த 5 மணிநேரத்துல ஏறத்தாழ 200 மீம்ஸ் போட்ருகாங்க இவங்க! இவ்ளோ சீக்கிரம் எப்படிதான் யோசிக்கிறாங்களோ தெரியலை. சீரியஸ் சென்சேஷனல் விஷயங்களை ஊடகங்களே தர தயங்கும்போது, நம்ம மீம் பாய்ஸ் அசால்ட்டா உள்ள புகுந்து எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுருவாங்க!!!! மறைந்த முதல்வர் மருத்துவமனையில அனுமதிகப்பட்டது தொடங்கி அவங்க மறைவுக்குப் போட்ட மீம்ஸ் வரைக்கும் பல சர்ச்சைகள் கிளம்பியிருக்கிறது. நடிகர் சங்க தேர்தல், நம்ம ஊர் தேர்தல், விஜயகாந்த்துக்கு ஆதரவு கரங்கள் நீட்டியது, மோடியின் கறுப்புப் பண ஒழிப்பிற்கு முதலில் ஆதரவு தெரிவித்து விட்டு பின்னர் ஏ.டி.எம். வாசல்ல போய்க் கால் கடுக்கத் தினமும் நின்னுட்டு வீட்டுக்கு வந்தவுடனே “போங்கய்யா நீங்களும் உங்க தீர்ப்பும்னு” கோவமா மீம்ஸ் போட்டதுன்னு ஏகப்பட்ட களேபரங்கள் இங்கே நடந்துருக்கு!!! இப்ப கூடப் பாருங்க, சின்னம்மாவுக்கு அவ்ளோ மீம்ஸ்!!!! 

பல சமயங்களில் டெம்ப்ளேட் இல்லாத கஷ்டம் இவங்களுக்கு வரும்.....அது போன்ற நேரத்துல ஏதாச்சும் ஒரு கான்செப்ட்ட யூஸ் பண்ணிப்பாங்க!!! மொக்க விஷயத்தைக் கூட எடுத்துப் புடிச்சு கான்செப்ட்டாக்கும் திறமை மீம் பாய்ஸ்க்கு தான் இருக்கு!!! உதாரணமா, EXPERTS WOULD HAVE TOLD ME ன்னு ஒரு மீம் கான்செப்ட்....எதுக்கு எடுத்தாங்க, எப்போ எடுத்தாங்கன்னே தெரியாத ஒரு செக்ஷன் அதெல்லாம்!!!’

2016ன் டாப் மீம்ஸ் சிலவற்றின் தொகுப்புக்கு இங்கே க்ளிக் செய்யவும்

-ஜெ.நிவேதா, 
மாணவப் பத்திரிகையாளர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்