Published:Updated:

அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி நிர்வாகம்

Vikatan Correspondent
அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி நிர்வாகம்
அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி நிர்வாகம்
அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி நிர்வாகம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியால், ஏற்கெனவே இங்கிலாந்து அணி கவலையில் இருந்தது. இந்நிலையில் சென்னையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில், அவர்களுக்கு செய்துள்ள பாதுகாப்பு விபரங்களை, கணினி மூலம் இங்கிலாந்து ரசிகர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அதில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் அறை எண், அங்கு அவர்களுக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு விபரங்கள் இருந்துள்ளது.  இதையடுத்து அவர் இந்த விஷயத்தை அணி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு விபரங்களுக்கு பாஸ்வேர்டு வைக்காததே இதற்கு காரணமாம். இதனால் இங்கிலாந்து அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.