Published:Updated:

'குளிக்கத்தானேய்யா போனேன்... அதுவரைக்கும் காத்திருக்க மாட்டீங்களா..?' - கலகல நாஞ்சில் சம்பத்

Vikatan Correspondent

அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் பரவியது. இது குறித்து நாஞ்சில் சம்பத்தின் நெருங்கிய நண்பரான லட்சுமணிடம் பேசியபோது, " அரசியலை விட இலக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நண்பர்களிடம் தமாஷாக கூறினார். இதை சிலர், அவர் அரசியலில் இருந்து விலகுவதாகவும், அதிமுகவில் இருந்து வெளியேறுவதாகவும் பெரிதுப்படுத்தி விட்டனர். அதிமுகவில் இருந்து விலகும் எண்ணம் அவருக்கு இல்லை. இது தொடர்பாக விரைவில் விரிவான பேட்டி அளிப்பார். தற்போது பேரக் குழந்தைகளுடன் அவர், ஆற்றில் குளிக்கச் சென்று உள்ளார்.அதற்குள் இப்படி கிளப்பி விட்டுட்டாங்களே" என்றார். 

இதனிடையே, நாஞ்சில் சம்பத்தின் மகள் மதிவதனி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, என்னுடைய தந்தை அரசியலில் இருந்து விலகுவதாக வரும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அது வதந்தி" என்றார்.

- எஸ்.மகேஷ்