Published:Updated:

மின்னணு பணப் பரிவர்த்தனை திட்டம் சாத்தியம்

Vikatan Correspondent
மின்னணு பணப் பரிவர்த்தனை திட்டம் சாத்தியம்
மின்னணு பணப் பரிவர்த்தனை திட்டம் சாத்தியம்
மின்னணு பணப் பரிவர்த்தனை திட்டம் சாத்தியம்

மின்னணு பணப் பரிவர்த்தனையை மக்கள் ஏற்றுக்கொண்டதாக புதுச்சேரி ஆளுநர்  கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

மின்னணு பணப் பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று கூறியிருந்த கருத்துக்கு பதில் சொல்லும் விதமாக புதுச்சேரி ஆளுநர்  கிரண்பேடி இன்று பதில் அளித்துள்ளார். 


புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மின்னணு பணப் பரிவர்த்தனை அனைத்தும் சாத்தியமே. மின்னணு பண பரிவர்த்தனை திட்டம் நாளைய தலைமுறையினர் அனைவருக்கும் பயன்படக் கூடிய ஒன்று. இதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படலாமே தவிர, இந்தத் திட்டம் பயனுள்ள திட்டம். மக்கள் இதை ஏற்றுக்கொண்டனர். அனைவரது கருத்துக்களும் வரவேற்கத்தக்கது" என்று அவர் கூறியுள்ளார்.