Published:Updated:

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!

Vikatan Correspondent
கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!
கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!
கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!

கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டடங்களை உடனடியாக இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய சுற்றுலாத்தளமான கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல கடும் நெரிசல் உண்டாகிறது. உடனடியாக கொடைக்கானலில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாரிச்சாமி என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை 2 மாதங்களில் கொடைக்கானலில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கொடைக்கானல் நகராட்சி ஆணையருக்கு உத்தரவு போட்டியிருக்கிறது.

-சண்.சரவணக்குமார்