Published:Updated:

வருகிறது டிஜிட்டல் கிராமம் திட்டம்

Vikatan Correspondent
வருகிறது டிஜிட்டல் கிராமம் திட்டம்
வருகிறது டிஜிட்டல் கிராமம் திட்டம்
வருகிறது டிஜிட்டல் கிராமம் திட்டம்

ஸ்மார்ட் சிட்டியை தொடர்ந்து மத்திய அரசு டிஜிட்டல் கிராமம் திட்டத்தை கொண்டு வர உள்ளது. முதல் கட்டமாக  100 கிராமங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பின்னர், இதில் பல கிராமங்கள் இணைக்கப்படும் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். அதன்படி, இந்த திட்டத்தில் சுகாதாரம், கல்வி ஆகிய சேவைகள் தொழில்நுட்பத்தின் உதவி மூலம் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராமங்களை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேர்ந்தெடுப்பார்கள். குறிப்பாக டிஜிட்டல் கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்படும் கிராமங்களுக்கு வைஃபை சேவையும் வழங்கப்படும்.