'நாய்களின் தந்தை' இது சாஃப்ட்வேர் இன்ஜினீரியரின் புதுமையான சேவை!

பெங்களூர் அருகே மென்பொறியாளர் ராகேஷ் சுக்லா என்பவர் மூன்றரை ஏக்கர் நிலத்தில் பண்ணை வீடு அமைத்து 735 தெருநாய்களை வளர்த்து வருகிறார். இந்த சேவை காரணமாக ராகேஷ் சுக்லாவை 'நாய்களின் தந்தை' என்று அழைக்கின்றனர். நாய்களுக்கு சமைக்கவும் மற்றும் நாய்களைக்  கவனித்துக்கொள்ளவும் 10 பேரை வேலைக்கு வைத்திருக்கிறார். 

இதற்காக சுமார்  45,135 ரூபாய் செலவாகிறது என்று சொல்லும் ராகேஷ் சுக்லா, இதில் பெருமளவில் நன்கொடையாக கிடைக்கிறது என்கிறார். இதுகுறித்து ராகேஷ் சுக்லா கூறுகையில் ''நான் டெல்லி மற்றும் அமெரிக்காவில் பணி புரிந்து வந்தேன். பிறகு பெங்களூரில் சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். பணம் இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. பிறகு காவ்யா என்று பெயரிட்டு ஒரு நாயை வளர்த்துவந்தேன். அதில் எனக்கு தனி சந்தோஷம் கிடைக்கவே இன்னொரு நாயையும் வளர்க்க ஆரம்பித்தேன்.

இப்படி என் வாழ்க்கைக்கு மாற்றம் ஏற்பட்டதால் தெருநாய்களை எங்கு கண்டாலும் அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்தேன். வீட்டில் இடம் போதவில்லை என்பதினால் பண்ணையை வாங்கி அந்த நாய்களை இடம் மாற்றினேன். இங்கு நாய்களுக்கு குளிக்க நீச்சல் குளம், ஓடி விளையாட இடம், பாதுகாப்புக்கு வேலி என அமைத்தேன்'' என கூறி நெகிழ்கிறார் ராகேஷ் சுக்லா. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!