வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (22/12/2016)

கடைசி தொடர்பு:15:05 (27/06/2018)

ஜூமா... ஹராம்பே... சக்திமான்... மனிதர்களிடம் சிக்கி உயிரிழந்த ஜீவன்கள்! #2016Rewind

2016ல் மனிதர்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் விலங்குகளுக்கு அல்ல. இந்த ஆண்டு செய்திகளில் இடம்பெற்ற சில முக்கிய விலங்குகளை கொஞ்சம் நினைவு கூரலாம்.

1) பத்ரா:

மருத்துவம் படிக்கும் மாணவர்களின் இழிவான செயலில் சிக்கியது பத்ரா என்னும் நாய். மொட்டை மாடியில் இருந்து அந்த நாய்க்குட்டியை தூக்கி எறிந்து, ஸ்லோ மோஷனின் வீடியோ பிடித்து வைரல் ஆக்கினட் அந்த எதிர்கால டாக்டர்கள். பத்ரா கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு மருத்துவ உதவியும் கொடுக்கப்பட்டது. மாணவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும் 


2) நாய்க்குட்டியும் குரங்கும்:

மனிதர்

தளபதி படத்தின் பிஜிஎம்மை நினைத்துக் கொள்ளுங்கள். இந்த குரங்கும், நாய்க்குட்டியும் சூர்யா தேவாதான். இரண்டும் இனங்களும் பரம விரோதிகள். ஆனால், ஒரே தட்டில் பால் குடிக்கும் அளவுக்கு நண்பர்கள். இத்தனைக்கும் சூர்யா நாய்க்குட்டியை, தேவா குரங்கு, பெரிய நாய் கும்பல் ஒன்றிடம் இருந்து காப்பாற்றித்தான் தன்னுடன் வைத்துக் கொண்டது.

விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும் 

 

3) சித்தா யானை

கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் யானைகளின் நடமாட்டம் இருப்பதாக வனபப்குதியினர் தெரிவித்திருந்தனர். அந்த ஐந்து யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். அதற்கிடையில், சித்தா என்ற ஒரு யானை நகருக்குள் புகுந்து, சாலையை கடக்க முயற்சித்தது. அதிகாலை நேரம். அப்போது அங்கு வந்த அரசுப்பேருந்து ஒன்று யானை மீது மோத, அங்கேயே சரிந்தது சித்தா. அதன் கால் முறிந்தது. மருத்துவர்களின் நீண்ட முயற்சிக்கு பின் நவம்பர் மாதம் எழுந்து நின்றது சித்தா.

விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும் 

 

4) சக்திமான் குதிரை

  உத்தராகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பா.ஜ.க போராட்டம் நடத்தியது. போராட்டத்தை அடக்க வந்த போலீஸார் பயன்படுத்திய குதிரைதான் சக்திமான். அங்கிருந்த பாஜக எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி குதிரையை கம்பால் வெறி கொண்டு தாக்கினார். இதில் சக்திமானின் கால் உடைந்து போனது. பின், சக்திமானுக்கு செயற்கை கால் பொருத்தினார்கள். ஆனாலும், சக்திமானின் உடல்நிலை மோசமாகவே இருந்தது. இறுதியில் உயிரை விட்டது சக்திமான். மனிதர்களை எதிர்த்து மனிதர்கள் போராடியதில், ஒரு குதிரையின் உயிர்தான் போனது.
விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும் 


5) ஜூமா சிறுத்தை


ஒலிம்பிக் டார் ஓட்டத்திற்காக அமேசான் காடுகளில் புகழ்பெற்ற சிறுத்தை ஒன்றை அழைத்து வந்திருந்தார்கள். அந்த சிறுத்தைதான் ஜூமா. நிகழ்ச்சி நடந்த இடத்தில் சங்கிலியால் கட்டப்பட்டு வைத்திருந்தார்கள். திடிரென பயிற்சியாளரின் கைகளில் இருந்து சங்கிலி நழுவ, ஜூமா ஓடத் தொடங்கியது. அதுதானே விலங்குகளின் இயல்பு? அதை பார்த்த ராணுவ வீரர் ஒருவர் ஜூமாவை நோக்கி சுட்டார். அங்கே செத்து வீழ்ந்தது ஜூமா
விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும்

6) ஹராம்பே சிம்பன்ஸி


சின்சினாட்டி நகரில் உள்ள காப்பகம் ஒன்றில் வாழ்ந்து வந்த சிம்பன்ஸிதான் ஹராம்பே. அங்கு வந்த பார்வையாளரின் மூன்று வயது குழந்தை ஒன்று தவறி ஹராம்பே வாழ்ந்த பகுதிக்குள் விழுந்து விட்டது. அங்கிருந்து தவழ்ந்தே அந்த குழந்தை மேலே ஏறியது. மீண்டும் தண்ணீருக்குள் விழுந்தது.

அங்கிருந்த மூன்று சிம்பன்ஸிகளை ஊழியர்கள் கூண்டுக்குள் அடைக்க முயற்சித்தனர். அதில் ஹராம்பே என்ற சிம்பன்ஸீ தவிர மற்ற இரண்டும் உள்ளே சென்றது. குழந்தையை நோக்கி சென்ற ஹராம்பேவின் நடவடிக்கைகளை பார்த்து பயந்த ஊழியர்கள் அதை சுட்டுக் கொன்று விட்டனர். சம்பவம் நடந்த நாளுக்கு முன் தினம் தான் ஹராம்பேவின் 17வது பிறந்த நாள்.


7) பான் உர்ராங்குட்டான்

“உங்களுக்கு மத்தில வாழ்றதே சாதனைதான்” என்பது சினிமா பன்ச் மட்டுமல்ல. விலங்குகளுக்கு நிஜத்திலும்தான். உலகின் மூத்த உர்ராங்குட்டான் என்ற கின்னஸ் சாதனையை படைத்தது பான்.
விரிவான செய்திக்கு இங்கு க்ளிக் செய்யவும் 

-கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்