Published:Updated:

ராமமோகன ராவுக்கு பதவி நீக்க உத்தரவு இப்படித்தான் சென்றது!

ராமமோகன ராவுக்கு பதவி நீக்க  உத்தரவு இப்படித்தான் சென்றது!
ராமமோகன ராவுக்கு பதவி நீக்க உத்தரவு இப்படித்தான் சென்றது!
ராமமோகன ராவுக்கு பதவி நீக்க  உத்தரவு இப்படித்தான் சென்றது!

தமிழக தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உத்தரவு அஞ்சல் மூலம் ராமமோகன ராவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தபாலை அவரது உதவியாளர் பெற்றுக் கொண்டார்.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளராக ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டார். அதிகாரத்தில் கோலோச்சி வந்த ராமமோகன ராவ், வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.  துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சோதனையால் ராமமோகன ராவின் பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ராமமோகன ராவை தமிழக அரசு இன்று அதிரடியாக தமிழக தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இந்த உத்தரவு கடிதம் தபால் மூலம் அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தபாலை பெண் ஊழியர் ஒருவர், ராமமாேகன ராவின் உதவியாளரிடம் வழங்கினார். அந்த தபாலை கையெழுத்திட்டு அவர் பெற்றுக் கொண்டார். 

பதவி பறிப்பைத் தொடர்ந்து ராமமோகன ராவ் காரில் இருந்த சைரன் உடனடியாக அகற்றப்பட்டது.

படம்: பா.காளிமுத்து