மார்க்குக்கு ஏவ்ரில் லாவிக்னே கண்டனம்!

கனடாவைச் சேர்ந்த இளம் பாடகியும், நடிகையுமான ஏவ்ரில் லாவிக்னே, தான் அங்கம்வகித்த 'நிக்கெல்பேக்' என்ற இசைக்குழு குறித்து கேலியான கருத்துக்களைப் பதிவு செய்ததற்காக, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் பணிவிடை செய்வதற்காக 'ஜார்விஸ்' என்ற புதிய மென்பொருளை மார்க் உருவாக்கியுள்ளார். இந்த மென்பொருளை அவரது வீட்டு உபயோகப் பொருட்களில் இணைத்து, வாய்ஸ், மொபைல் அல்லது கம்ப்யூட்டர் மூலமே கட்டுப்படுத்தும்படி அவர் வடிவமைத்துள்ளார். இது குறித்த விளக்க வீடியோவில், 'நிக்கெல்பேக்' இசைக்குழுவின் நல்ல பாடலை ஒலிக்குமாறு ஜார்விஸ்க்கு மார்க் உத்தரவிட, 'எனக்குப் பயமாக இருக்கிறது. என்னால் ஒலிபரப்ப முடியாது' என ஜார்விஸ் பதில் அளிக்கிறது. உன்னைப் பரிசோதிக்கவே அவ்வாறு ஆணையிட்டேன். நிக்கெல்பேக் இசைக்குழுவில் ஏது நல்ல பாடல்? எனக் கேலியாகக் குறிப்பிடுகிறார்.

இந்த கருத்திற்கு எதிராகத்தான் ஏவ்ரில் லாவிக்னே தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், 'நிக்கெல்பேக் குறித்த உங்கள் கேலி ரசிக்கும்படியாக இல்லை. பிறரை சொற்களால் காயப்படுத்தும் செயல்கள் அதிகரித்திருக்கும் இவ்வேளையில், நீங்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்' என அவர் மார்க் சக்கர்பெர்க்கிற்குத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!