Published:Updated:

சட்டவிரோதமான பார்க்கிங்... புகாரளித்தால் 200 ரூபாய் சன்மானம்

Vikatan Correspondent
சட்டவிரோதமான பார்க்கிங்... புகாரளித்தால் 200 ரூபாய் சன்மானம்
சட்டவிரோதமான பார்க்கிங்... புகாரளித்தால் 200 ரூபாய் சன்மானம்
சட்டவிரோதமான பார்க்கிங்... புகாரளித்தால் 200 ரூபாய் சன்மானம்

சாலைகளின் ஓரத்தில் சட்ட விரோதமாக பார்க் செய்யப்படும் வாகனங்கள் தொடர்பாக கடுமையான சட்டதிட்டங்களை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. சாலைகளில் சட்டத்துக்குப் புறம்பாக பார்க்கிங் செய்தால், இப்போதுள்ள 200 ரூபாய் அபராதத்தை, ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டம் உள்ளதாக சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக பார்க் செய்யப்பட்டிருக்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து, புகார் அளிப்பதற்கான அரசு வலைதளத்தில் பதிவிட்டால், 200 ரூபாய் சன்மானம் அளிக்கவும் திட்டம் வைத்துள்ளது மத்திய அரசு.