Published:Updated:

சபரிமலையில் கூட்டநெரிசல்: 25 பக்தர்கள் காயம்

Vikatan Correspondent
சபரிமலையில் கூட்டநெரிசல்: 25 பக்தர்கள் காயம்
சபரிமலையில் கூட்டநெரிசல்: 25 பக்தர்கள் காயம்

சபரிமலையில் கூட்ட நெரிசலால் 25 பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தடுக்க கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.