Published:Updated:

முதல்வருடன், மத்திய குழு ஆலோசனை: திமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு!

வர்தா புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன், மத்தியக்குழு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த குழுவை சந்திக்க 3 மாவட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வர்தா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மரங்கள், வீடுகள், வாகனங்கள் தேசம் அடைந்தன. இதைத் தொடர்ந்து அண்மையில் பிரதமர் மோடியை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து 22 ஆயிரம் கோடி ரூபாய் புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து மத்திய குழு இன்று சென்னை வந்தது. இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த இந்த குழுவினர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த சந்திப்புக்குப் பின், முதல் கட்டமாக சென்னை பனகல் பார்க், திருமங்கலம் உள்ளிட்ட இடங்களை மத்தியக்குழு பார்வையிடுகிறது.

முதல்வருடன், மத்திய குழு ஆலோசனை: திமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு!

இதனிடையே,  சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மத்தியக்குழுவை சந்திக்க தலைமைச் செயலகம் வந்தனர். முன் அனுமதி பெறாமல் மத்தியக்குழுவைச் சந்திக்க முடியாது என்று கூறி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

இந்த குறித்து மா.சுப்ரமணியன் கூறுகையில்,'22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான கோரிக்கை மத்தியக்குழுவிடம் கொடுக்க தலைமைச் செயலகம் வந்தோம். அனுமதி மறுக்கப்பட்டதால், மத்தியக்குழுவை வேறொரு இடத்தில் சந்தித்து மனுவை கொடுத்தோம்' என்று கூறினார்.