Published:Updated:

சென்னையில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு!

சென்னையில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு!
சென்னையில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு!
சென்னையில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு!

சென்னையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு தனது ஆய்வைத் தொடங்கியுள்ளது. 

கடந்த 12-ம் தேதி வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 22 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு.

இந்த குழுவினர் இன்று சென்னை தலைமைச் செயலகம் வந்தனர். அவர்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, குழுவினர் சென்னை தி.நகரில் உள்ள பனகல் பார்க்கில் தங்களது ஆய்வை தொடங்கினர். 9 பேர் கொண்ட குழுவினர் அரை மணி நேரம் ஆய்வு நடத்தினர். இதைத் தொடர்ந்து அண்ணாநகர் வளைவில் குழுவினர் ஆய்வை மேற்கொண்டனர். இதையடுத்து திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் குழுவினர் ஆய்வை மேற்கொள்ள உள்ளனர்.