Published:Updated:

மார்ச் 31க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் இதுதான் நடக்கும்!

மார்ச் 31க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் இதுதான் நடக்கும்!
மார்ச் 31க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் இதுதான் நடக்கும்!
மார்ச் 31க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் இதுதான் நடக்கும்!

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதோடு, மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு 500, 1000 ரூபாய் நோட்டுகள் 10க்கு மேல் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சில வழக்குகளில் 4 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் வழங்கப்படுமாம்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், டிசம்பர் 30-ம் தேதிக்குள் இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமரின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு படையெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏடிஎம்களில் தினந்தோறும் 2 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி அறிவிப்பால் பொதுமக்கள் இன்று வரை பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி காலக்கெடுக்கு பின் (மார்ச் 31, 2017) பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 10க்கு மேல் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

டிசம்பர் 31ல் இருந்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை எங்குமே பயன்படுத்த முடியாது. வங்கியிலும் மாற்ற முடியாது. முற்றிலுமாக காலாவதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.