Published:Updated:

ராமேஸ்வரம் அஞ்சலகத்தில் கங்கை தீர்த்தம்

ராமேஸ்வரம் அஞ்சலகத்தில் கங்கை தீர்த்தம்
ராமேஸ்வரம் அஞ்சலகத்தில் கங்கை தீர்த்தம்
ராமேஸ்வரம் அஞ்சலகத்தில் கங்கை தீர்த்தம்

கடித பரிமாற்றம், பணப் பரிமாற்றம் போன்ற சேவைகளை வழங்கி வரும் அஞ்சல் துறையின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் சமீப காலமாக திருப்பதி தரிசன டிக்கெட், முக்கிய ஆலயங்களின் பிரசாதங்கள், ரயில் டிக்கெட் முன்பதிவுகள் என விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது கங்கை தீர்த்தமும் சேர்ந்துள்ளது. 200 மில்லி லிட்டர் கங்கை தீர்த்தம் 15 ரூபாய்க்கும், 500 மில்லி லிட்டர் கங்கை தீர்த்தம் 22 ரூபாய்க்கும் ராமேஸ்வர அஞ்சலகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

- இரா.மோகன்