Published:Updated:

கன்னியாகுமரியிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்

கன்னியாகுமரியிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்
கன்னியாகுமரியிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்
கன்னியாகுமரியிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னை மாநகரைப்போலவே கன்னியாகுமரியிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இந்த ஆண்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி மூலம் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது. ஹோட்டல்கள் மற்றும் வாகனங்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது. அவர்கள் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியின் அளவை குறைத்து புத்தாண்டு கொண்டாடலாம். ஆனால் நள்ளிரவு 12 மணிக்குள்  முடித்துக் கொள்ள வேண்டும். வாணவேடிக்கை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

முக்கியமாக, கடற்கரையில் மது அருந்திவிட்டு யாரும் சுற்றித்திரியக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் கூடி நிற்கக்கூடாது. கடற்கரை சாலைகளில் பைக்கில்  வேகமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேவாலயங்களில் நள்ளிரவில் நடக்கும் பிரார்த்தனைகளுக்கு எந்தவிதமான தடையும் இல்லை. அங்கு பிரார்த்தனைகள், புத்தாண்டு வாழ்த்து நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெறும். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

- த.ராம்