Published:Updated:

லஞ்சம் கேட்டு வசமாக மாட்டிய வருமான வரித்துறை அதிகாரி!

விகடன் விமர்சனக்குழு
லஞ்சம் கேட்டு வசமாக மாட்டிய வருமான வரித்துறை அதிகாரி!
லஞ்சம் கேட்டு வசமாக மாட்டிய வருமான வரித்துறை அதிகாரி!
லஞ்சம் கேட்டு வசமாக மாட்டிய வருமான வரித்துறை அதிகாரி!

விசாகப்பட்டினத்தில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக வருமான வரித்துறை அதிகாரியை சிபிஐ கைது செய்துள்ளது. விசாகப்பட்டினத்தில் வருமான வரித்துறையில் பணிபுரியும்  பி.சீனிவாச ராவ், அசையா சொத்துகளை விற்க வந்த ஒருவரிடம் 1,50,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நபர் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியதும், பணத்தை தவணை முறையில் வாங்க சம்மதித்த ராவ் முதல் தவணையாக 30,000 ரூபாய் செலுத்துமாறு கேட்டுள்ளார். அந்த நபர் அளித்த புகாரின் பேரில் ராவ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.