ஜியோவை சமாளிக்குமா ஏர்டெல்? #PlanComparison

ஜியோ

சுறுசுறுப்பான தேனீக்களைப் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் இணையம் என்பது பிரிக்க முடியா அத்தியாவசிய தேவையாகி விட்டது. அவர்களைப் போலவே இணையமும் வேகமாக இயங்க வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்பு. அத்தகைய எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் பொருட்டு தனது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு எண்ணற்ற சலுகைகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் தற்போது பரபரப்பாக மக்கள் மத்தியில் பேசப்படும் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்த எண்ணற்ற சலுகைகளை வழங்கி வருகிறது.அதனை ஈடு செய்யும் அளவுக்கு ஏர்டெல் நிறுவனமும் ஜியோவுக்கு இணையாக சலுகைகளை வழங்கி வருகிறது.

ஜியோ, ஏர்டெல் எதிர்கால திட்டங்கள் :

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு தனது வாடிக்கையாளர்களுக்காக இலவச சேவையை வெளியிட்டது. டிசம்பர் 31 வரை இருந்த இலவச சேவை மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மார்ச் 31க்குப் பிறகு தனது வாடிக்கையாளர்களுக்கான சேவை பற்றிய திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது..

ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை வெளியிட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் 4G சேவைக்காக TDD-LTE தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.ஜியோ 4G சேவைக்காக FDD-LTE தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

4G மொபைலில் மட்டுமே ஜியோவை பயன்படுத்த முடியும்.இவை 4G சேவைகளை மட்டுமே வழங்குகின்றன.ஆனால் ஏர்டெல் 4Gயை 2G , 3G தொழில்நுட்பங்களிலும் பயன்படுத்த இயலும்.

ஜியோ VoLTE(voice over LTE) சேவையை வழங்குகிறது.இதன் மூலம் இலவச காலிங் வசதியைப் பெறலாம். மேலும் விரைவாக வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஏர்டெல் சேவையை மொபைல் அல்லது GPRSல் மட்டுமே பயன்படுத்த இயலும்.ஆனால் ஜியோ சேவையை மொபைல், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.

எதிர்கால திட்டங்கள்:

ஜியோ:

2G மற்றும் 3G மொபைல்களிலும் ஜியோ தனது சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான சலுகைகளை வழங்க ஜியோ திட்டமிட்டு உள்ளது.

அதாவது மாணவர்களுக்காக மட்டுமே குறைந்த கட்டணத்தில் அதிக அளவிற்கு டேட்டா மற்றும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு திட்டமிட்டு வருகின்றது.

ஏர்டெல்:

இலவச காலிங் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மேலும் 51 ரூபாய்க்கு 1GB டேட்டாவை ஒரு மாதத்துக்கு  இரவில் மட்டும் வழங்கி வந்ததை முழுவதுமாக வழங்குவதற்கு முயற்சி எடுத்து வருகின்றது.

ஏர்டெல் speed டெஸ்ட் :

 

ஜியோ speed டெஸ்ட்:

 

 

- வெ.வித்யா காயத்ரி 

(மாணவப் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!