இப்படி ஒரு கேலக்ஸியை பார்த்திருக்க மாட்டீங்க!

'இதுவரை இப்படி ஒரு கேலக்ஸியை பார்த்ததே இல்லை' என கண் அகல சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். சமீபத்தில் அவர்கள் கண்டறிந்த PGC 1000714 கேலக்ஸியின் மையம் சிவப்பு நிறத்திலும் சுற்றி இருக்கும் வளையம் நீல நிறத்திலும் இருக்கிறதாம். Hoag என்ற வகையைச் சேர்ந்த இந்த கேலக்ஸி மிக மிக அரிதானது என்றும் இதன் மையத்தின் வயது 5.5 பில்லியன் ஆண்டுகளாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மொத்த பிரபஞ்சத்திலும் PGC 1000714 மட்டும்தான் இப்படி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!