வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (05/01/2017)

கடைசி தொடர்பு:17:53 (05/01/2017)

களத்தில் மட்டுமல்ல...ட்விட்டரிலும் அசத்தும் தோனியின் ஹெலி ஷாட்! #MissUDhoni #ThankYouDhoni

தோனி ராணுவம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றது போல, கிரிக்கெட்டில் இருந்து முழுவதும் ஒய்வு பெற்றதாக அறிவிக்கவில்லை தோனி. ஆனால் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கே சோஷியல் மீடியாக்களில் லட்சக்கணக்கில் கொட்டுகின்றன ரசிகர்களின் ரியாக்ஷன்கள். 

டிவி, சினிமா, அரசியல் மேடைகள், விளையாட்டு களம் என பிரபலங்களுக்கு எப்படி ஒரு பிம்பம் எழுகிறதோ, அதைப் போலவே சோஷியல் மீடியாக்களிலும் அவர்களுக்கு என ஒரு பிம்பம் உண்டு. அங்கேயும் அவர்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. களத்தில் எதிரணியின் பந்துகளை சிதறவிட்ட சேவாக் தற்போது ட்விட்டரிலும் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார். நாட்டின் முக்கிய நிகழ்வுகள், தினசரி பணிகள் அனைத்தையும் உடனுக்குடன் அப்டேட் செய்வது மோடியின் ஸ்டைல். இதுபோல தோனி ட்விட்டர்ல எப்படி இயங்குகிறார் எனத் தெரியுமா? அங்கேயும் மிஸ்டர் கூலாக இருக்கிறார் தோனி.

2009-ல் ட்விட்டரில் இணைந்த தோனி, இதுவரை போட்ட மொத்த ட்வீட்களின் எண்ணிக்கை வெறும் 437தான். இந்தியாவில் அதிகமாக பின்தொடரப்படும் ட்விட்டர் கணக்குகளில் 38-வது இடத்தில் இருக்கிறார். சுமார் 58.7 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர். ஆனால் தோனி ட்விட்டரில் ஃபாலோ செய்வது வெறும் 32 பேரைத்தான்.

சேவாக், ஹர்பஜன், இஷாந்த் ஷர்மா, முரளி கார்த்திக், அமித் மிஸ்ரா, ஸ்ரீசாந்த், கம்பீர், சச்சின், அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆர்.பி.சிங், யுவராஜ், ரெய்னா, பிரணாய் ராய், ஜான் ஆப்ரகாம், அனிருத் சவுத்ரி, சாஜித் ஷாமிம், கோலி, அஸ்வின், ஜாகீர் கான், அபிஷேக் பச்சன், மோடி, அஜய் தேவ்கன், சுஷாந்த் உள்ளிட்டோர்களுடன் பி.சி.சி.ஐ., ஐ.பி.எல் உட்பட 8 பக்கங்களை மட்டுமே ஃபாலோ செய்கிறார்.
2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 'feels good to be connected!!!!!!!!' எனப் போட்ட ட்வீட்தான் தோனி ட்விட்டர் பக்கத்தில் பதிந்த முதல் ட்வீட்டாக இருக்கிறது. அதற்கு பிறகுதான் ட்விட்டரில் ஆக்டிவ் மஹியாக மாறியிருக்கிறார். இன்றைய தேதியில் இருந்து 2301 நாட்களுக்கு முன்னர் தோனி Twitpic மூலம் ஷேர் செய்த இந்த போட்டோதான் ட்விட்டரில் பகிர்ந்த முதல் போட்டோ. 

தோனி

தோனிக்கு அதிகாரப் பூர்வமான யூ-டியூப் சேனல் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் அதனை 2010-ல் தனது ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார் தல.

ஆர்வமாக அந்த லிங்க் சென்று பார்த்தால், வெறும் 4 வீடியோக்கள்தான் இருக்கின்றன. அதில் தோனியின் முதல் வீடியோ இதுதான். லைவ் சாட்டிங்கிற்காக ரசிகர்களிடம் கேள்விகளை அனுப்ப சொல்லியிருக்கிறார் தோனி. ஆனால் அது இறுதியில் முடியாமல் போகவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த வீடியோவை கொஞ்சம் பாருங்களேன்...அப்போதைய தோனிக்கும், இப்போதைய தோனிக்கும் இடையேயான மாற்றங்களை பார்ப்பீர்கள்! அவரின் குணத்தை தவிர!

 

அதற்கு பிறகு ட்விட்டர் பக்கமே வராத தோனி, மீண்டும் 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் ஒரு வருடம் கழித்துத்தான் 'ஐ வில் பி பேக்' சொல்லியிருக்கிறார். அதற்கு பிறகு ஹைலைட்டான ட்வீட் என்ன தெரியுமா? 2011-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கோலி 86 ரன்களும், ரெய்னா 80 ரன்களும், பவுலர்கள் இங்கிலாந்தை 220 ரன்களிலும் சுருட்ட மூவரையும் வாழ்த்தி ட்வீட் போட்டிருக்கிறார் தோனி. கடைசியில் அந்த தொடரை  5 - 0 என வென்று, தொடர் நாயகன் பட்டத்தோடு, தீபாவளி வாழ்த்து சொல்லியிருக்கிறார் கேப்டன்.

பிறகு 26-ம் தேதி தீபாவளி முடித்துவிட்டு, 27-ம் தேதி தோனி போட்ட ட்வீட் என்ன தெரியுமா? அந்த ட்வீட் போலவே ஒரு வசனம் எம்.எஸ்.தோனி: அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் வசனமாகவே வந்தது. அது இதுதான்.


அடுத்து நவம்பர் மாதம் நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் 144 ரன்கள் எடுத்ததை பதிவு செய்திருக்கிறார் அந்த மேட்சில் டிராவிட், லட்சுமணனுக்கு அடுத்து 3-வது சதம் இவருடையது. அந்த மேட்சில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றுள்ளது இந்தியா.

தோனி பைக் பிரியர், வெறியர் என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததுதான். அவற்றிற்கு இடம் இல்லாமலா? ட்விட்டரில் தோனி பதிந்த முதல் பைக் படம் இதுதான். 

தோனியின் பைக் தொடர்பான ட்வீட்ஸ்:

இரண்டு 'தல'-களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை இந்த பைக் பிரியம்தான். 

தோனியின் முதல் பைக் எது தெரியுமா?


பைக் மெக்கானிக்கான தோனி


கிரிக்கெட் மட்டும் இல்லாமல், மற்ற விளையாட்டுகளிலும் தோனி ஆர்வம் உடையவர். பள்ளி நாட்களிலேயே கால்பந்தில் இருந்துதான், கிரிக்கெட்டிற்கே டைவ் அடித்தார். எனவே ட்விட்டர் பக்கத்தில் மற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டும் ட்வீட்ஸ் அதிகமாக இருக்கின்றன. 2012 ஜூலை மாதம், ககன் நரங் ஒலிம்பிக் பதக்கம் வாங்கியதற்காக பாராட்டிய ட்வீட் இது.


இதுபோல பலமுறை மற்ற வீரர்களை பாராட்டியிருக்கிறார். 

 

அதேபோல 2013-ல் ஜடேஜாவை பலமுறை ட்விட்டரில் கலாய்த்து, காலி செய்திருக்கிறார் மனிதர். 


சூப்பர்ஸ்டாரையும், ஜடேஜாவையும் லிங்க் செய்த அந்த ட்வீட்:


ஜடேஜாவை வச்சு செய்த இந்த நேரத்தில் ட்விட்டரில் செம ஜாலி மேனாக இருந்திருக்கிறார் கேப்டன். 


கேப்டனாக, பேட்ஸ்மேனாக தோனி எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றையும் நாம் ரசித்திருப்போம். அது பற்றிய ஜாலி ட்வீட் இதோ...


இந்திய கிரிக்கெட் அணியின் உறுப்பினர், பைக்கர், கேமர், பெட் லவ்வர் என்றுதான் ட்விட்டர் அறிமுகத்திலேயே வைத்திருக்கிறார். அது தொடர்பான ட்வீட்களும் இருக்கின்றன.


சென்னை, தோனி, CSK இந்த மூன்றையும் பிரிக்கவே முடியாது. சேப்பாக்கம் மைதானத்தில் எத்தனை முறை தோனிக்கு விசில் போட்டிருப்போம்? தல என கத்தியிருப்போம்? அதற்கு தோனி என்ன சொல்லியிருக்கிறார் எனப் பாருங்கள்!


2014 முதல் இன்ஸ்டாவிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார் மஹி.

தோனியின் மகள் ஸிவா வைரல் பேபி. முதன்முதலில் குழந்தையை ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்ததை 2015-ல் பகிர்ந்திருக்கிறார். 

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் ஹர்ஷா போக்லேவின் கமெண்ட்ரி மிஸ்ஸிங். அந்த சர்ச்சையில் தோனி பெயரும் அடிபட்டது. அதற்கு காரணமான ட்வீட்...


பிறந்தநாளுக்கு அரசியல் வாதிகள் மட்டும்தான் மரம் நடணுமா என்ன?

தோனியின் கடைசி ட்வீட் இதுதான்...மகள் ஸிவா போட்டோவை பகிர்ந்திருக்கிறார்.

2013-14-ல் எல்லாம் தோனி கொஞ்சம் அதிகம் ஆக்டிவ்வாக இருந்திருக்கிறார். கடந்த ஆண்டு, மொத்தம் பதிவிட்ட ட்வீட்கள் 29-தான்.கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதைக் கூட, பி.சி.சி.ஐ.,தான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. 2014- 16 காலகட்டத்தில் எத்தனையோ கிரிக்கெட் மொமென்ட்கள் இருந்தன. கேப்டனாக, பேட்ஸ்மேனாக, இந்திய அணி வீரராக, ஐ.பி.எல் சாம்பியனாக என எத்தனையோ விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கலாம். ஆனால் சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை ரொம்பவும் பெர்சனலான விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். தோனியின் சக்தே இந்தியா மொமன்ட்ஸ் சில.. 

தோனியின் பெஸ்ட் மொமென்ட்ஸ் என்றால், தோனியின் ரசிகனாக உங்கள் நினைவுக்கு வருவது எதுவாக இருக்கும்? உலககோப்பை சிக்ஸ்? ஐ.பி.எல் கோப்பைகள்? வங்கதேச அணியை பஞ்சர் ஆக்கிய ரன் அவுட்? ஹெலிகாப்டர் ஷாட்ஸ்? தோனியை நாம் எத்தனை முறை இப்படி பெஸ்ட் விஷயங்களுக்காக ட்ரென்ட் ஆக்கியிருக்கிறோம்? ஆனால் அவர் இதற்கெல்லாம் அதிகம் ட்விட்டரில் ரியாக்ட் செய்யவே இல்லை என்பது நன்றாக தெரிகிறது. மாறாக கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக்கில் வேறு மாதிரி இன்னும் இறங்கி அடித்திருக்கிறார். 

கண்ணில் அடிபட்டது , ஜிம் எக்சர்சைஸ், கபாலி போஸ், குழந்தையுடன் தாடியுடன் காட்சியளித்தது, சலூனில் முடி வெட்டியது என ஏகப்பட்ட வைரல் போட்டோஸ் தோனி டைம்லைனில் கிடக்கின்றன. கிரிக்கெட் என்பதைத் தாண்டி, இவரது சோஷியல் மீடியாக்களில் கிடைப்பவை கால்பந்து, ரேசிங், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள், ராணுவம், பைக், செல்லப் பிராணிகள், மனைவி மற்றும் குழந்தை, டிராவல், பள்ளிக்கால நினைவுகள் ஆகியவைதான். கிரிக்கெட் என்பதை தாண்டி, இப்படி பெர்சனலாகவும் ஹெலிஷாட் அடித்திருக்கிறார் தோனி.

தோனியின் ட்வீட் குறும்புகளில் சில! 


இவரது ட்விட்டரின் முதல் ட்வீட்டில் இருந்து, பார்த்தால் கிட்டத்தட்ட தோனியின் 7 ஆண்டுகளின் நினைவுகளை மீட்டெடுப்பது போல உள்ளது. தற்போது எல்லாவிதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்புகளில் இருந்தும், விலகிவிட்டார். அவரை நாம் தோனியாக பார்த்ததை விட, கேப்டனாக பார்த்ததுதான் அதிகம். இனிவரும் போட்டிகளில் பேட்ஸ்மேனாக மட்டும் தனது இன்னிங்க்சை ஆடப் போகிறார். இதேபோல இன்னும் இன்னும் நல்ல நினைவுகள் உங்கள் வாழ்வில் கிடைக்கட்டும் கேப்டன்! #ThankYouDhoni

- ஞா.சுதாகர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்