வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (13/01/2017)

கடைசி தொடர்பு:15:03 (13/01/2017)

ஃபிரமிங்ஹாம் மக்களுக்கு கோதாவரி அளிக்கும் பொங்கல் பரிசு இதுதான்! (sponsored content)

“சரி, பொங்கலுக்கு என்ன ப்ளான்?” என்றபடி உள்ளே நுழைந்த ராதிகாவை, அதிசயமாகப் பார்த்த ராஜேஷ், “என்ன எங்கிட்ட கேக்குற. நீயும், பசங்களும் எங்க போக ஆசைப்படறீங்களோ அங்க உங்களை கூட்டிட்டு போறதுதானே என் வேலை.” என்று கிண்டலாகச் சொன்னான். “ஒவ்வொரு முறையும் நீங்க இதையே சொல்றதால, இந்த முறை உங்க சாய்ஸ்தான். நீங்க சொல்லுங்க எங்க போகலாம்னு.” என்றாள் ராதிகா.

பத்து வருடங்களுக்கு மேல் அமெரிக்காவின் ஃபிரமிங்ஹாமில் ஐடி துறையில் வேலைபார்த்து அங்கேயே செட்டிலாகிவிட்ட ராஜேஷ் இன்னமும் இந்திய உணவுகள் மீதும், இந்திய பண்டிகைகள் மீதும் அதீத ஆர்வம் காட்டுபவன். இரண்டு குழந்தைகளும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவர்களுக்கும் இந்திய உணவுகள் என்றால் கொள்ளைப் பிரியம். இது போல பண்டிகை நாட்களில் ஆபிஸிற்கு லீவ் போட்டுவிட்டு கோவில் செல்வது வழக்கமான ஒன்று. பிறகு பிள்ளைகள் விருப்பபடி ஏதாவது இடங்களுக்கு அழைத்துச் செல்வான். இன்று ராதிகா அவனுடைய விருப்பப்படி எங்காவது செல்லலாம் என்றதும் குஷியானான். 

“இன்னைக்கு நல்ல ஒரு ஹோட்டலுக்குப் போயி நம்ம சவுத் இண்டியன் சாப்பாடு சாப்பிடணும்” என்றதுதான் தாமதம். “நீங்க இதைத்தான் சொல்வீங்கன்னு தெரியும். அதனாலதான் முன்கூட்டியே எல்லாம் விசாரிச்சு வெச்சுட்டேன். கோதாவரியோட முதல் ஹோட்டல் மாசெசூசட்ஸ்ல நாம திறந்தப்ப நாம போனோமே, நினைவிருக்கா? நீங்க கூட உங்க அம்மா செஞ்ச மாதிரியே இருந்ததுன்னு சொன்னீங்களே. அதே கோதாவரி ரெஸ்டாரென்ட் நம்ம ஃபிரமிங்ஹாம்ல பொங்கல் அன்னைக்கு (ஜனவரி 14) புதுசா கடை திறக்கறாங்க. பக்கத்துலயே 

“ஸ்ரீ லக்ஷ்மி” கோவிலும் இருக்கு. காலையில கோவிலுக்கு போயிட்டு அப்படியே சாப்பிடப் போயிடலாம். அதுக்கப்புறம் பசங்களுக்கு ஷாப்பிங் பண்ணவும் மால்கள் பக்கத்துல இருக்கு.” என்று ராதிகா சொல்லி முடிக்கும் முன்னரே சந்தோஷத்தில் மகிழ்ந்தான் ராஜேஷ்.

இந்த சங்கராந்திக்கு  ஃபிரமிங்ஹாமில் வாழும் இந்தியர்களுக்கு வேகமாக வளர்ந்து வரும் கோதாவரி குழுமம் வழங்கிடும் பொங்கல் பரிசு, அவர்களின் புதிய கிளை ஃபிரமிங்ஹாம் நகரில் இந்தப் பொங்கலன்று திறக்கப்படவுள்ளது. துவக்க நாளன்று ‘பொங்கல் ஸ்பெஷலாக’ சர்க்கரைப் பொங்கல், மொச்சைக்கோட்டைக் குழம்பு, காரப் பொங்கல், வெண் பொங்கல், போளி, ஏழு கறிக்கூட்டு, சென்னை ஸ்பெஷல் சாம்பார் சாதம், மற்றும் பல்வேறு மண் மணம் கமழும் கிராமத்து உணவு வகைகளும் பஃபே உணவாகக் கிடைக்கும். 

“கோதாவரி”யின் புகழ் உலகெங்கும் பரவி வருகிறது. துடிப்பான மற்றும் இளம் தொழில் முனைவோர்களின் முன்னெடுப்பில் தென்னிந்திய உணவை பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இது குறித்து கோதாவரியின் வடகிழக்கு செயல் தலைவர் மற்றும் சிகாகோ கோதாவரியின் உரிமையாளருமான வருண் மடிசெட்டி பேசுகையில், “கோதாவரியின் இந்த வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது, இந்த மங்களகரமான பொங்கல் நாளில் துவங்குவதில் நாங்கள் பேருவகை கொள்கிறோம். எவ்வளவு கிளைகள் தொடங்கி இருக்கிறோம் என்பதை விட நாங்கள் பரிமாறும் உணவின் தரம், எங்கள் உணவகத்தில் உணவருந்தியபோது கிடைத்த அனுபவம் ஆகியவையே முக்கியம்..கோதாவரி உலகிற்கு சிறந்த உணவை அளிப்பதற்காகத் துவங்கியுள்ள ஒரு தளம். இது கோதாவரி குடும்பம். ஒருவருக்கு ஒருவர் துணையிருப்போம்.” என்றார்.

நியுயார்க் கோதாவரி துவங்கியது முதல் கோதாவரியுடன் இணைந்து பணிபுரியும் அஜய் வெமுலா மற்றும் அஜய் கன்யதாரா  கூறுகையில் “கோதாவரியுடன் பயணிப்பது ஒரு நல்ல அனுபவம். ஒரு உணவகத்தின் உறுப்பினர் என்றில்லாமல் கோதாவரி குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறோம்” என்றார். 

கோதாவரி குழுமத்தில் சமீபத்தில் இணைந்த சார்லட் கிளையின் திறப்புவிழா பற்றிய காணொளியைக் காண இங்கே ‘கிளிக்’ செய்யவும். 

கோதாவரி இந்த 2017 ல் கொலம்பஸ், OH, ப்ளூமிங்டன், IL, லாஸ் ஏஞ்சல்ஸ், CA, நேஷ்வில், TN,  ஹாரிஸ்பர்க் PA மற்றும் டெட்ராய்ட் MI ஆகிய நகரங்களில் தன் கிளைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும் உணவுப் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி! கோதாவரி பாஸ்டன் மாநகரத்தில் ந்யு இங்கிலாந்து பகுதியிலேயே பெரிய உணவகம் ஒன்றைத் திறக்கவுள்ளது. இது மட்டுமல்லாது இன்னும் பல ஆச்சரியங்களுடன் உணவை நேசிப்பவர்களுக்கு புத்தாண்டுக்குப் பல புதுமையான விஷயங்களை பரிசாக அளிக்க உள்ளது.

நீங்கள் உண்ண விரும்பும் உணவை அளிக்க விரும்புவர்கள்

GODAVARI FRAMINGHAM,
1656 WORCESTER ROAD,
FRAMINGHAM, MA - 01702.
Framingham@godavarius.com <mailto:Framingham@godavarius.com>

www.GodavariUS.com 

நன்றி!  மீண்டும் சுவைத்திட வருக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்