Published:Updated:
மெரினாவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றும் காவல்துறை: கலையமறுக்கும் இளைஞர்படை (படங்கள்)

மெரினாவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றும் காவல்துறை: கலையமறுக்கும் இளைஞர்படை (படங்கள்)
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வுகோரி மெரினா கடற்கரையில் குழுமியிருக்கும் இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர்.

ஆனால் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த இளைஞர்கள் கடற்கரையை ஒட்டி குழுமியிருக்கின்றனர்.

அவர்களை காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் திட்டிவருகின்றனர். அத்துடன் செய்தியாளர்களையும் அப்பகுதிக்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், விரட்டப்பட்ட ஏராளமான இளைஞர்கள் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்குச் சென்று திரண்டு வருகின்றனர். அவர்களில் பலர் மெரினாவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

மெரினாவுக்கு செல்லும் பாதைகள் முடக்கப்பட்டுள்ளன.
- ராஜா ராமமூர்த்தி, சிபி
படங்கள்: பா.காளிமுத்து, நாகமணி