இன்று அறிமுகமாகிறது யமஹா FZ 250 பைக்!

 

யமஹாவின் பிரபலமான FZ சிரீஸ் பைக்கின் பவர்ஃபுல் மாடலாக, FZ 250 பைக்கை இன்று அறிமுகப்படுத்துகிறது யமஹா. இது பிரேசிலில் தற்போது விற்பனையாகும் ஃபேஸர் 250 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் இந்தியாவுக்கு ஏற்ப கணிசமான மாற்றங்களைச் செய்துள்ளது யமஹா. இதற்கு FZ 250 பைக்கின் டிஸைன், அலாய் வீல்கள், LED ஹெட்லைட் & டெயில் லைட், எக்ஸாஸ்ட் பைப், பெட்ரோல் டேங்க், ஸ்ப்ளிட் சீட் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

இதில் ஃபேஸர் 250 பைக்கில் இருக்கும் அதே 249சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஃப்யூல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஆயில் கூல்டு இன்ஜின், BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டிருக்கும் FZ 250 பைக், Auto headlamp on (AHO) வசதியைக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் ஏபிஎஸ் ஆப்ஷனலாக இருக்கலாம்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!