இந்தியாவில் 60% வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை! | 60 percent vehicles in india are not insured

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (24/01/2017)

கடைசி தொடர்பு:10:12 (24/01/2017)

இந்தியாவில் 60% வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை!

 

 

ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் (GIC) கூறியுள்ளபடி, இந்திய சாலைகளில் தினசரி பயணிக்கும் 60% வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமலே இருக்கின்றன. வேதனையான விஷயம் என்னவென்றால், அதில் பெரும்பங்கு வகிப்பது பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் தான்! ''கடந்த 2015 - 2016 ஆண்டில் மட்டும், 19 கோடி புதிய வாகனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதில் வெறும் 8.26 கோடி வாகனங்கள் மட்டுமே இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது'' என ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலின் செயலாளர் ஆர். சந்திரசேகரன் கூறியுள்ளார்.

 

 

நமது மக்கள் இப்போதுதான் இப்படி இருக்கிறார்களா? என்றால் அதற்கு பதில் இல்லைதான். ஏனெனில், கடந்த 2012 - 2013 ஆண்டு இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை (பைக்/ஸ்கூட்டர், கார்/கமர்ஷியல் வாகனம், டிரக்/பஸ் உட்பட) - 15 கோடி; இதிலும் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனங்கள் வெறும் 6.02 கோடிதான்! கடந்த 2015-ல் மட்டும், 5 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 29% விபத்துகள் டூ-வீலராலும், 23% விபத்துகள் கார்களாலும், 8.3% விபத்துகள் பஸ் போன்ற பெரிய வாகனங்கள் காரணக்கர்த்தாவாக இருக்கின்றன. 

 

 

எனவே விபத்துகளுக்குப் பெயர் பெற்ற இடநெரிசல்மிக்க இந்தியச் சாலைகளில், இப்படிப்பட்ட புள்ளி விபரங்களைப் பார்ப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும்போது, அதன் பாதுகாப்புக்காக Back Case Cover, Tempered Glass ஆகியவற்றைப் பார்த்து பார்த்து வாங்கும் இந்திய மக்கள், ஏனோ அதிக விலை மதிப்புள்ள வாகனங்களை இன்சூரன்ஸ் செய்ய மறுப்பதன் காரணம் தெரியவில்லை! 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க