''ஐ யம் பேக்'' - சொல்வது பல்ஸர் 200 NS பைக்! | Bajaj Pulsar 200NS all set to make a comeback

வெளியிடப்பட்ட நேரம்: 00:44 (27/01/2017)

கடைசி தொடர்பு:00:37 (27/01/2017)

''ஐ யம் பேக்'' - சொல்வது பல்ஸர் 200 NS பைக்!

அது 2012-ல் ஜூன் மாதம்... 10 ஆண்டுகளுக்குப் பிறகு, சூப்பர் டிஸைன் - புதிய தொழில்நுட்பம் - அதிக சிறப்பம்சங்கள் - டாப் பெர்ஃபாமென்ஸ் - முன்னேற்றப்பட்ட ஓட்டுதல் அனுபவம் - குறைவான பராமரிப்பு என பைக் ஆர்வலர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாகக் களமிறங்கியது முற்றிலும் புதிய பஜாஜ் பல்ஸர் 200 NS. எப்போதுமே கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக இருந்த பல்ஸர்கள், தனது அடுத்த பரிணாமத்தைக் காட்டியது இங்குதான்! இதனைத் தொடர்ந்து இந்த பைக்கின் அட்வென்ச்சர் டூரர் மாடலாக அறிமுகமானதுதான் பல்ஸர் AS 200. இதன் வரவால் தனது இடத்தை இழந்த 200 NS, இந்திய பைக் மார்க்கெட்டில் இருந்து விலகிக் கொண்டது. 

தற்போது பிப்ரவரி 2017 மாதத்தில், ''பழைய பன்னீர் செல்வம்'' போல இந்திய பைக் மார்க்கெட்டில் மீண்டு (ம்) வந்திருக்கிறது பஜாஜின் பல்ஸர் 200 NS. 2012-ல் பைக் எப்படி இருந்ததோ, இப்போதும் பார்ப்பதற்கு அப்படியேதான் இருக்கிறது. ஆனால் பழைய பைக்குடன் ஒப்பிடும்போது, 200சிசி BS-IV இன்ஜின், புதிய இன்ஜின் கவுல், புதிய கலர் & கிராஃபிக்ஸ், அலாய் வீல்களில் Pin Strip போன்ற புதிய அம்சங்கள், 2017-ம் ஆண்டுக்கான பஜாஜ் பல்ஸர் 200 NS பைக்கில் இடம்பிடித்துள்ளன! அப்பாச்சி RTR 200 பைக் அறிமுகமாகி சரியாக ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இதற்குப் போட்டியாக 2017 பஜாஜ் பல்ஸர் 200 NS பைக்கைப் பொசிஷன் செய்துள்ளது பஜாஜ். இதில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை ஆப்ஷனலாகவாவது இடம்பெற வேண்டும் என்பது, பைக் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க