வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (31/01/2017)

கடைசி தொடர்பு:10:27 (31/01/2017)

“செல்ஃபிபுள்ள தங்கமே... ஏ செல்ஃபிபுள்ள தங்கமே!” - மொபைல் அட்ராசிட்டீஸ் #NoisePollution

noise pollution

அதிர்ஷ்டம் ஆஃபர்ல வந்தா, தரித்திரம் ஃப்ரீயாவே வரும்னு சொல்வாங்க. அந்த மாதிரி சத்தம் ஸ்விஃப்ட் கார்ல வந்தா சைலன்ஸ் சைக்கிள்ல பொறுமையா வருது. இந்த உலகத்துல எந்தப் பக்கம் திரும்பினாலும் இருக்கிற ஒரே விஷயம் சத்தம்.. சத்தம்.. சத்தம்.. மட்டும்தான்.. நாளுக்கு நாள் சத்தத்தோட சத்தம் அதிகாவதும், சைலன்ஸ் இன்னும் சைலண்ட் ஆவறதும் ஏத்துக்கவே முடியாத விஷயம்னு தொண்டைல டார்ச் அடிச்சு பாக்குற ENT டாக்டருங்க கன்னத்துல கை வச்சு கவலைப்படுறாங்க. Noise pollution மனிதர்களோட இயல்பையே மாற்றக்கூடியதுன்னு சொல்றாங்க ஆய்வாளர்கள்.

ஒரு வேலையை ஒழுங்கா, நேரத்துல செஞ்சு முடிக்கணும்ன்னு அதுக்கு தேவை அமைதி.. ஆனா இந்த டமால் டுமீல் உலகத்துல அமைதிக்கு இடமே இல்லைன்றதால நம்மளோட புரொடக்டிவிட்டி கூட டமுக்கு டப்பான்னு குறைஞ்சிட்டே வருதாம். முதுகு வலிக்கிறப்ப வயித்து வலி மாத்திரைதான் கிடைக்குதுன்னா, திரும்பி நின்னு போட்டுக்கணும்னு சொல்ற இந்த நவீன வாழ்க்கைல இன்னொரு முக்கிய பிரச்சினை சத்தத்தோடயே வாழ பழகிக்கிறது. கொஞ்ச நேரம் கண்ண மூடி என்னலாம் தோணுதுன்னு பாருங்க? “பக்கத்துல டைப் பண்ற கீபோர்ட் சத்தம், ரோட்டுல போற பஸ் காரு, வானத்துல உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்னு சீறுற ஃப்ளைட், டண்டணக்கா மொபைல் ரிங் டோன்”..மனசுக்கு இதமா எதாச்சும் தோணுச்சா? ப்ச். இப்பலாம் காது தான் ஓவர் டைம் பாக்குது.

பஸ்ல ஏறி உக்காந்தா போதும். மொபைல் ஸ்பீக்கர்ல “செல்ஃபி புள்ள.. ஹே ஹேய் செல்ஃபிபுள்ள”ன்னு பாட்ட போடுவான். பதிலுக்கு இன்னொருத்தன் ”தல ஃபேன் நான் மட்டும் என்ன தக்காளி தொக்கான்னு தங்கமே தங்கமே என்ன ஆச்சு”ன்னு போடுவான். நம்ம நேரம் “செல்ஃபிபுள்ள..தங்கமே.ஏ செல்ஃபிபுள்ள தங்கமே”ன்னு கேட்கும். காது ரெண்டுனாலும் கேட்குறது ஒண்ணுதானேன்றாரு செவுட்டு சித்தர்ன்ற மகான். இப்பதான் அரசாங்கம் கொஞ்சம் உஷார் ஆகி பொது இடங்கள்ல மொபைல் ஸ்பீக்கர்ல பாட்டு போட கூடாதுன்னு பஸ், டிரெயின்ல எல்லாம் எழுதி வச்சிருக்கு.

தியேட்டர்ல படம் பாக்க போனா அங்கயும் வந்துடுவாங்க. ஹீரோ நெஞ்ச புடிச்சிட்டு உசுர கொடுத்து நடிச்சிட்டு இருப்பாரு. நம்ம கண்ணுலயும் லேசா தண்ணி எட்டிப் பாக்குற சமயத்துல பக்கத்துல மொபைல் ரிங் ஆகும். “எனக்கு நிறைய வேலை இருக்கு.. ஐ அம் பிசி”னு கவுண்டர் டயலாக எல்லாம் ரிங்டோனா வைச்சிருப்பாங்க. ஃபோன எடுக்க ஏண்டா லேட் பண்றன்னு நமக்கு கோவம் கோக்கு மாக்கா வர்றப்ப கரெக்டா எடுத்து “ஹலோ. சொல்லுடா வெண்ணை.. தேட்டர்ல இருக்கேன்”ன்னு இன்னும் சத்தமா பேசுவான். இதுக்கு கவுண்டர் ரிங்டோனே பரவால்லன்னு தோணும். தெரியாம பண்ணிட்டான்னு மன்னிச்சு விட்டா அடுத்த அஞ்சாவது நிமிஷம் மறுபடியும் கவுண்டர் பிசி. சைலண்ட் மோட்னு ஒண்ணு இருக்குன்னு தெரியாதவரைக்கும் எவ்ளோ காஸ்ட்லி ஃபோனா இருந்தாலும் அது ஸ்மார்ட் ஃபோன் ஆகாது பாஸ்.

வீட்டுக்கு வெளியதான் இப்படின்னு இல்லை. ஆஞ்சு ஓஞ்சு ஒரு வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சா “அடி பாவி மகளே.. இப்படி மோசம் போயிட்டியேன்னு” சீரியல் சவுண்டு கேட்கும். கவனிச்சிருக்கீங்களா? கரெக்ட்டா வெள்ளிக்கிழமை ஆனா சீரியல்ல யாராவது ஒருத்தவங்க செத்துடுவாங்க, இல்லைன்னா ஓடிடுவாங்க, இல்லைன்னா மோசம் போயிடுவாங்க. அதுக்குன்னே இருக்கிற கேரக்டருங்க ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடும். பேசும் படம் மாதிரி டயலாக்கே இல்லாத பேசும் சீரியல்னு ஒண்ணு வர்ற வரைக்கும் நம்ம காதுக்கு ஆப்புதான். கார்ட்டூன் சேனல்ல கூட டப்பிங் பண்றன்னு இப்பலாம் இரைச்சலாதான் இருக்கு. இப்பலாம் நம்ம வீட்டுல கேட்காத ஒரே சத்தம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிற சத்தம்தான்.

முன்ன மாதிரி இல்லைங்க. வேலை செய்றப்ப பாட்டு, வேலை முடிஞ்சதும்  கடலைனு ஹெட்ஃபோன் இல்லாத பொண்ணுங்களையே இப்ப பாக்க முடியுறதில்லை. அந்த ஹெட்ஃபோனிலும் காதுக்கு உள்ள எவ்ளோ தூரம் போகுதோ அந்த மாடலுக்குதான் கிராக்கி அதிகம். கதற கதற அடிக்கிறதுன்றது காதுக்குதான் சரியா செட் ஆகும். நம்மள நமக்கே காட்டுற சைலன்ஸ் நமக்கு எதிரியாவும், சத்தம் நண்பனாகவும் ஆக்கி வச்சிருக்கு இந்த உலகம்.

 சத்தத்துக்கும் மனுஷ குணத்துக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்றாங்க..”ஏமிடா தொங்கனா கொடுக்கா.. சம்பேஸ்தான்னு” ன்னு சவுண்டு விடுற தெலுங்கு படம் பாக்குற மக்கள் எல்லாத்திலும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சென்சிட்டிவா இருப்பாங்க. அடிதடியோ, அன்போ, ஆன்மிகமோ.. கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜுதான். அதே சமயம் “மனச்சிலாயோ”ன்ற மலையாள மக்கள் சாராயாக்கடைல கூட வரிசைல நின்னு வாங்குறவங்களா இருப்பாங்க. நிம்மதியான வாழ்க்கைக்கு தேவை சத்தம் இல்லை சைலன்ஸ்ன்றத நாம மறக்கவே கூடாது.

ஒரு பதினஞ்சு நிமிஷத்துக்கு மனுஷன் ஏற்படுத்துற எந்த சத்தமும் கேட்காத மாதிரி ஒரு இடமே இல்லையாம். அருவியோட சத்தம், கடலோட சத்தம், குருவி கத்துறதுன்னு எதுவுமே ரசிச்சு கேட்க நம்ம காது ட்யூன் ஆகல. நமக்கு தெரிஞ்சதெல்லாம் டுர் டுர் , பாம் பாம், க்றிச்..டேய் வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியாதான்.. சத்தம் அதிகமா இருந்தா அது கூட அசுத்தம் தான். Noise pollution

தினம் 10 நிமிஷம் எந்த சத்தமும் கேட்காம, அமைதியான இடமா பாத்து உக்காந்து பாருங்க. புதுபேட்டை தனுஷ் மாதிரி “யாரா இருக்கீங்களா? பயமா இருக்கு”ன்னு சொல்ற மனச அடக்கி பாருங்க. ஒரு புது உலகமே தெரியும்.

-கார்க்கிபவா

ஓவியம்: எம்.ஜெயசூர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்