வீட்டில் இருக்கும் புத்தகங்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்? | How to Keep Books in Good Condition?

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (31/01/2017)

கடைசி தொடர்பு:15:14 (31/01/2017)

வீட்டில் இருக்கும் புத்தகங்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

புத்தகங்கள் நாளைய தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லக்கூடிய அரிய அறிவுச் செல்வங்கள். பலர் இந்த எண்ணத்தில்தான் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறார்கள். அப்படி வாங்கிச் சேமிக்கும் புத்தகங்களைச் சரிவர பராமரிக்காவிட்டால், புத்தகங்கள் வீணாகி விட வாய்ப்புண்டு.

 
புத்தகங்களை எப்படிப் பாதுகாப்பது? 

 

 புத்தகங்களை பாதுகாப்பது எப்படி?, புத்தகங்கள், பாதுகாப்பு, book safty, old books            

                     

* புத்தகங்களை நீண்ட நாட்கள் பாதுகாப்பது என்பது நெடும்பணி. புத்தகத்தைப் படிப்பது தொடங்கி, பாதுகாப்பாக அடுக்கிவைப்பது வரை எல்லாமே நேர்த்தியாக நடக்க வேண்டும். புத்தகங்களை அழுக்கான கையால் தொடக்கூடாது. படிக்க அமரும் முன்  கைகளை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்தக்கொள்ளுங்கள். புத்தகத்தின் தன்மை மாறாமல் இருக்க இது உதவும். 

*  சாப்பிடும்போது புத்தகம் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே படிப்பதும் நல்லதல்ல. புத்தகத்தில் தண்ணீர் சிந்தினால் வீணாகிவிடும். உணவு அல்லது ஸ்னாக்ஸ் சிந்தினால், அது பூச்சிகளுக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி. புத்தகம் மட்டுமில்லாமல், புத்தகத்தில் ஒட்டியிருக்கும் உணவும் அவற்றை வா வா என்று ஈர்க்கும்.

* சூரிய ஒளி நேரடியாக புத்தகத்தின் மீது விழக்கூடாது. விழுந்தால், புத்தகத்தாளின் தன்மை மாறிவிட வாய்ப்புண்டு. அதேபோல, குளிர்ச்சியான இடங்களிலும் புத்தகத்தை வைத்து வாசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

புத்தகங்களை பாதுகாப்பது எப்படி?, புத்தகங்கள், பாதுகாப்பு, book safty, old books

* Chubby Cheeks போன்ற புக்மார்க்குகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அவை புத்தகத்தை டேமேஜ் செய்யும். குறிப்பு எடுக்கின்ற பக்கத்தில் ஒரு சிறிய தாளை வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்.  

*  படிக்கும்போது, பக்கங்களைச் சுருக்கவோ உறையை மடிக்கவோ கூடாது. இரண்டு கைகளாலும் பிடித்துப் படியுங்கள். மேஜையின்மீது வைத்துப் படியுங்கள்.

*  குழந்தைகளிடம் வாசிப்பைத் தூண்டவேண்டியது மிகவும் அவசியம். அதேநேரம், கிழிக்காமலோ, மடக்காமலோ படிக்க குழந்தைகளுக்குப் பயிற்சி அளியுங்கள்.

* புத்தகங்களை கிச்சனுக்குப் பக்கத்தில் அடுக்கிவைத்துப் பாதுகாப்பது நல்லதல்ல. தொடர்ச்சியான வெப்பம் புத்தகத்தின் தன்மையைப் பாதிக்கும். 

*  திறந்த ஸ்லாப்பில் புத்தகங்களை  அடுக்கும்போது, இறுக்கமாக வைக்கக்கூடாது. இறுக்கமற்ற நிலையில் அடுக்க வேண்டும். அதே சமயம், அலமாரியில் வைக்கப்படும்  புத்தகங்கள்  மிக நெருக்கமாகவோ மிகத் தளர்வாகவோ இருக்கக் கூடாது.

 

*  புத்தகங்களைப் படுக்கை நிலையில் அடுக்கிவைப்பதைத் தவிர்க்க வேண்டும். புத்தகங்களை இறுக்கமாக அடுக்கி வைத்திருப்பின் அவற்றுள் ஒன்றை எடுக்கும்போது,  மேல் பகுதியில் பிடித்து எடுத்தால் புத்தகம் கிழியலாம். எனவே, அடுக்கிவைத்த நிலையில் உள்ள புத்தகங்களை நடுபகுதியில் பிடித்து எடுக்க வேண்டும்.

*  பிளாஸ்டிக் பைகளுள் புத்தகங்களை வைத்திருந்தால், ஈரப்பதமாகி புத்தகம் கிழிந்துவிடும்.  அல்லது பூச்சி அரித்துவிடும். Acid free Box-களில் புத்தகங்களை வைத்திருக்கலாம்.

*  எப்பொழுதும் தூசி படியாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். மாதம் ஒருமுறையேனும் எடுத்து சுத்தம்செய்துகொண்டே இருக்க வேண்டும். 

இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. புத்தகங்களைப் படிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் குழந்தைகள், மாணவர்கள் என்று அனைவருக்கும் படிக்கும் வழக்கத்தை வளர்க்க வேண்டும். தினமும் படிக்கும் வழக்கம் இருந்தால், குறிப்புகளுக்கோ, சரி பார்க்கவோ அடிக்கடி புத்தகங்களை எடுக்க நேரிடும். அதுவே அவற்றைப் புதிய பொலிவுடன் பாதுகாக்கும். 

இவ்ளோ விஷயம் இருக்கான்னு மலைக்காதீங்க... அறிவுப் பொக்கிஷமாக இருக்கும் புத்தகங்களைப் பாதுகாக்க இந்த அளவுக்காவது மெனக்கெடலைன்னா எப்படி பாஸ்?! 

                                                                     - பா.பிரியதர்ஷினி 

(மாணவப் பத்திரிகையாளர்)


டிரெண்டிங் @ விகடன்