வைரலாகும் ‘கோவைப் பாட்டு’..!

கொங்கு தமிழ் பேசும் இளசுகள் பலரும் இன்று, சமூக வலைதளங்களை கோவைப் பாட்டால் நிரப்புகின்றனர். இந்த கோவைப் பாட்டை, கோயம்புத்தூரை மையப்படுத்தியும் கோயம்புத்தூரைச் சுற்றுயுள்ள பகுதிகளிலும் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலை எழுதி, இயக்கியிருக்கிறார், விஜய் ஆனந்த் டிஆர். இந்தப் பாடலை, பாடகர் திவாகர் பாட, அல் ரூஃபியன் இசையமைத்திருக்கிறார். 

கோயம்புத்தூரில், எல்லா முக்கிய  இடங்களிலும் கேமரா வைத்துள்ளார், இந்தப் பாடலின் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர். அதிலும் அந்த ஓப்பனிங் மருதமலை ஷாட், செம ப்ரோ. இந்தப் பாடலை ஐந்து நிமிடங்கள் நாற்பத்தி எட்டு வினாடிகளுக்கு எடிட் செய்து கொடுத்திருக்கிறார், எடிட்டர் புஷ்பராஜ் ஜெபாஸ்டின். கோவையை நேசிக்கும் உள்ளங்களுக்கு இந்தப் பாடல் கோயம்புத்தூருக்குச் சென்று வந்த திருப்தியைக் கொடுக்கும். இதுவரை கோவைக்குச் செல்லாத தோழர்கள், இந்தப் பாடலின் மூலம் கோவையைச் சுற்றிப் பார்த்துக்கோங்க.  

...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!